×

ஆன்மிக OTT தளத்தை தொடங்கும் ULLU நிறுவனர் விபு அகர்வால்!

ULLU என்ற ஆபாச OTT தளத்தின் நிறுவனர் விபு அகர்வால், விரைவில் புராணங்களை ஒளிபரப்புவதற்கென பிரத்யேகமாக ‘ஹரி ஓம்’ என்ற மற்றொரு OTT தளத்தை தொடங்குகிறார்.மூத்த குடிமக்கள், குழந்தைகள், இளம் வயதினர் என அனைத்து தரப்பினரும் பார்க்கும் வகையில் வீடியோ மற்றும் ஆடியோ முறையில் பஜனைகள், அனிமேஷன் வடிவில் புராணக்கதைகள் என ஒளிபரப்ப திட்டமிடப்பட்டுள்ளது. ஜூன் 24ம் தேதி முதல் அறிமுகமாகும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘ஹரி ஓம்’ குறித்து அகர்வால் கூறுகையில்; இந்தியர்களாகிய நாம் நமது கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் பாரம்பரியத்தை அறிந்து கொள்வது அவசியம். முழு குடும்பமும் ஒன்றாக பார்க்கக்கூடிய புராண மற்றும் மத உள்ளடக்கத்தை மட்டுமே இடம்பெறும் வகையில், இந்த தளம் இருக்கும். மூத்த குடிமக்கள் மற்றும் இளைய பார்வையாளர்கள் மத்தியில் நமது இந்திய புராணங்களை ஆராய வேண்டும் என்ற கோரிக்கையை உணர்ந்து, தற்போதுள்ள இடைவெளியைக் குறைக்கும் வகையில் இந்த தனித்துவ தளத்தை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். என்று கூறியுள்ளார்.

 

The post ஆன்மிக OTT தளத்தை தொடங்கும் ULLU நிறுவனர் விபு அகர்வால்! appeared first on Dinakaran.

Tags : ULLU ,Vibu Aggarwal ,Vibu Agarwal ,
× RELATED குவைத் தீ விபத்தில் பலியான தமிழர்கள்...