×

தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் மின் விபத்துகளால் ஒரே நாளில் 5 பேர் உயிரிழப்பு

சென்னை: தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் மின் விபத்துகளால் ஒரே நாளில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். நாமக்கல், விழுப்புரம், சென்னை, சேலம் ஆகிய பகுதிகளில் இன்று ஒரே நாளில் மின்சாரம் தாக்கி 5 பேர் பலியாகியுள்ளனர்.

சேலம் மாவட்டம் அம்மாபேட்டையை சேர்ந்த அர்த்தநாரி என்பவர் மொத்த மளிகை வியாபாரம் செய்து வருகிறார். வீடும் , கடையும் ஒன்றாக இருக்கக்கூடிய அப்பகுதியில் இன்று பிற்பகல் அவரும் அவரது மகன் தண்டபாணியும் சேர்ந்து கடையின் பழைய பெயர் பலகையை மாற்ற முயன்றுள்ளனர்.

அப்போது புது பெயர் பலகை மின்கம்பத்தின் மீது மோதி மின் விபத்து ஏற்பட்டத்தில் தண்டபாணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்த அர்த்தநாரி அரசு மருத்துவமனையில் அனுமத்திக்கப்பட்டார்.

இந்நிலையில் தமிழ்நாட்டில் பல்வேறு பகுதியிகளில் நடைபெற்ற மின் விபத்துகளில் 5 பேர் உயிரிழந்துள்ளார். சென்னையை அடுத்த குரோம்பேட்டை பகுதியில் கட்டிட பணியின்போது ஆனந்த் ஏமாற்ற இளைஞர் உயிரிழந்தார்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் மின்சாரம் தாக்கி கணவன், மனைவி ஆகியோர் உயிரிழந்தனர். விழுப்புரம் மாவட்டம் தேவனூரில் கட்டுமான பணிகளின்போது மின்சாரம் தாக்கி மேஸ்திரி ஜோதி உயிரிழந்தார்.

The post தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் மின் விபத்துகளால் ஒரே நாளில் 5 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,Namakkal ,Viluppuram ,Salem ,Arthnari ,Ammapettai, Salem District ,
× RELATED நாமக்கல் மாவட்டத்தில் 12 அரசு...