×

நாடு முழுவதும் இதுவரை நடந்து முடிந்த 4 கட்ட மக்களவை தேர்தலில் 45 கோடி பேர் வாக்களித்துள்ளனர்: இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு

டெல்லி: நாடு முழுவதும் இதுவரை நடந்து முடிந்த 4 கட்ட மக்களவை தேர்தலில் 45 கோடி பேர் வாக்களித்துள்ளனர் என தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 4 கட்டத் தேர்தல்கள் நிறைவு பெற்றுள்ளன.1ம் கட்ட தேர்தலில் 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளும், 2ம் கட்ட தேர்தலில் 13 மாநிலங்களில் உள்ள 89 தொகுதிகளுக்கும் 3ம் கட்ட தேர்தலில் 12 மாநிலங்களில் உள்ள 94 தொகுதிகளுக்கும், 4ம் கட்ட தேர்தலில் 10 மாநிலங்களில் உள்ள 96 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது.

இதில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா, குஜராத், மத்தியபிரதேசம், அருணாலப்பிரதேசம், அசாம், சத்தீஸ்கர், கோவா, மணிப்பூர், மிசோரம், நாகலாந்து, ராஜஸ்தான், சிக்கிம், திரிபுரா, உத்தரகாண்ட் போன்ற மாநிலங்களில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலுக்கான முதல் நான்கு கட்ட தேர்தல்களில் தற்போதுவரை 66.95% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்த 4 கட்ட தேர்தல்களில் இதுவரை 45 கோடியே 10 லட்சம் பேர் வாக்களித்துள்ளனர். 4 கட்டங்களில் இதுவரை 66.95% வாக்குப்பதிவாகி உள்ள நிலையில், எஞ்சியுள்ள 3 கட்ட தேர்தல்களில் வாக்குப்பதிவை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க மாநில தேர்தல் அதிகாரிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தகுதியுள்ள அனைத்து வாக்காளர்களுக்கும் உரிய நேரத்தில் பூத் ஸ்லிப்புகளை வழங்குமாறு அறிவுறுத்தல் வழங்கி உள்ளது.

The post நாடு முழுவதும் இதுவரை நடந்து முடிந்த 4 கட்ட மக்களவை தேர்தலில் 45 கோடி பேர் வாக்களித்துள்ளனர்: இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Election Commission of India ,Delhi ,Election Commission ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் வாக்கு எண்ணிக்கை...