×

நாடு முழுவதும் இதுவரை நடந்து முடிந்த 4 கட்ட மக்களவை தேர்தலில் 45 கோடி பேர் வாக்களிப்பு

டெல்லி : நாடு முழுவதும் இதுவரை நடந்து முடிந்த 4 கட்ட மக்களவை தேர்தலில் 45 கோடி பேர் வாக்களித்துள்ளனர். இதுவரை 4 கட்டங்களாக 370 மக்களவை தொகுதிகளுக்கு தேர்தல் நடந்து முடிந்துள்ளது. 4 கட்டங்களில் இதுவரை 66.95% வாக்குப்பதிவாகி உள்ள நிலையில், எஞ்சியுள்ள 3 கட்ட தேர்தல்களில் வாக்குப்பதிவை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க மாநில தேர்தல் அதிகாரிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தகுதியுள்ள அனைத்து வாக்காளர்களுக்கும் உரிய நேரத்தில் பூத் ஸ்லிப்புகளை வழங்குமாறு அறிவுறுத்தல் வழங்கி உள்ளது.

The post நாடு முழுவதும் இதுவரை நடந்து முடிந்த 4 கட்ட மக்களவை தேர்தலில் 45 கோடி பேர் வாக்களிப்பு appeared first on Dinakaran.

Tags : Lok Sabha ,Delhi ,Lok ,Sabha ,Dinakaran ,
× RELATED புதிய எம்.பி.க்களை வரவேற்க தயார்: மக்களவை செயலகம் அறிவிப்பு