×

ஆன்லைன் ரம்மி விளையாடி பணத்தை இழந்த மருத்துவக் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை

சென்னை: ஆன்லைன் ரம்மி விளையாடி பணத்தை இழந்த, சென்னை கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த மருத்துவக் கல்லூரி மாணவர் தனுஷ் (23) தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். வடசென்னை கொருக்குப்பேட்டை கேகேநகரை சேந்த தனுஷ் ஆவடியில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் 3ம் ஆண்டு பயின்று வந்தார்.

இவர் ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்ததாக கூறப்படுகிறது. இழந்த பணத்தை மீண்டும் பெறுவதற்காக தொடர்ந்து விளையாடிய தனுஷ், தந்தையிடம் ரூ.24,000 பணம் கேட்டதாகவும், அதற்கு தன்னிடம் பணம் இல்லை என கூறி அவரது தந்தை ரூ.4,000 கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து ரூ.4,000 பணத்துடன் அறையின் உள்ளே சென்று தாழ்பாள் போட்டு கொண்ட தனுஷ் நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் தனுஷின் தங்கை கதவை தட்டியும் திறக்காததால் அருகில் இருந்தவர்கள் உதவியுடன் கதவை திறக்க முயர்ச்சித்தும் முடியாததால் சந்தேகமடைந்த அவர்கள் ஆர்கேநகர் தகவல் தெரிவித்தனர்.

இந்த தகவலின் அடிப்படையில் அப்பகுதிக்கு வந்த போலீசார் கதவை உடைத்து பார்த்தபோது தனுஷ் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இதையடுத்து தனுஷ் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேதபரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர். இதையடுத்து தனுஷின் செல்போனை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

The post ஆன்லைன் ரம்மி விளையாடி பணத்தை இழந்த மருத்துவக் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Dhanush ,Chennai Korukuppetta ,Private Medical College ,Dhanush Avadi, North Chennai ,Korukupettai Kegenagar ,
× RELATED சென்னையில் ஆன்லைன் சூதாட்டத்தால் பணத்தை இழந்த மருத்துவ மாணவர் தற்கொலை..!!