- வீரபாண்டி கௌமாரியம்மன் கோயில்
- Kolakalam
- பிறகு நான்
- மஞ்சள் நீர் விழா
- கௌமாரியம்மன் கோயில் சித்திரத் திருவிழா
- வீரபாண்டி
- கவுமாரியம்மன் கோயில்
- சித்ரா விழா
- இக்கோயில்
- வீரபாண்டி கௌமாரியம்மன் கோயில்
தேனி: தேனி அருகே வீரபாண்டியில் உள்ள கவுமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவையொட்டி நேற்று மஞ்சள்நீராட்டு விழா நடந்தது. தேனி அருகே வீரபாண்டியில் பிரசித்தி பெற்ற கவுமாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் எட்டு நாட்கள் சித்திரை திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். திருவிழாவின்போது, தேனி மாவட்டம் மட்டுமின்றி தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திருவிழாவில் கலந்து கொள்வர்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா கடந்த மே 7 ம்தேதி முதல் நேற்று முன்தினம்(14ம்தேதி) வரை எட்டு நாட்கள் நடந்தது. சித்திரைத் திருவிழா நிறைவடைந்ததையடுத்து, நேற்று காலை கோயிலில் அம்மன் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு, மஞ்சள்நீர் தெளித்து கோயிலில் இருந்து ஊர்வலமாக வீரபாண்டி கிராமத்திற்குள் உள்ள கோயில் வீட்டிற்கு செல்லும் நிகழ்ச்சி நடந்தது. இதனையடுத்து, வீரபாண்டி கிராமத்தினர் மஞ்சள் நீரினை ஒருவருக்கொருவர் தெளிக்கும் நிகழ்ச்சி நடந்தது.
The post வீரபாண்டி கவுமாரியம்மன் கோயிலில் மஞ்சள் நீராட்டு விழா கோலாகலம் appeared first on Dinakaran.