×

ஆரணி பேரூராட்சியில் பழுதடைந்த குடிநீர் தொட்டி அகற்றம்

ஊத்துக்கோட்டை, மே 16: ஆரணி பேரூராட்சியில் பழுதடைந்த குடிநீர் தொட்டியை பேரூராட்சி நிர்வாகத்தினர் அகற்றினர். பெரியபாளையம் அருகே ஆரணி பேரூராட்சியில் வியாபாரிகள், நெசவாளர்கள், விவசாயிகள் என 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு, குடிநீர் விநியோகம் செய்வதற்காக பேரூராட்சியில் உள்ள இருக்கம் தெருவில் 1983ம் ஆண்டு 3 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டப்பட்டது. இதன்மூலம், அப்பகுதி மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது.

இந்த, குடிநீர் தொட்டி கட்டி 41 வருடங்களுக்கு மேல் ஆனதால் பழுதடைந்து காணப்பட்டது. இவ்வாறு, பழுதடைந்து காணப்படும் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியினை அகற்றிவிட்டு, புதிய குடிநீர் தொட்டி கட்டித்தர வேண்டும் என அப்பகுதி மக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்தனர். இந்த, கோரிக்கையின்படி ஆரணி பேரூராட்சி நிர்வாகம் சார்பில், நேற்று பழுதடைந்த குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியினை பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து அகற்றினர். தற்போது, வேறுவேறு குடிநீர் தொட்டியில் இருந்து மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. மேலும், விரைவில் அம்ருத் திட்டம் மூலம் புதிய குடிநீர் தொட்டி கட்டும் பணிகள் தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post ஆரணி பேரூராட்சியில் பழுதடைந்த குடிநீர் தொட்டி அகற்றம் appeared first on Dinakaran.

Tags : Arani municipality ,Oothukottai ,Periyapalayam ,Dinakaran ,
× RELATED ஆரணி பேரூராட்சி பஜார் பகுதியில்...