×

தூங்கிய மூதாட்டியை கொன்ற மனநலம் பாதித்தவர் சிக்கினார் மருத்துவமனையில் அனுமதி குடியாத்தத்தில் கடந்த மாதம்

குடியாத்தம், மே 15: குடியாத்தத்தில் மூதாட்டி தலையில் கல்லைப்போட்டு கொலை செய்த மனநலம் பாதிக்கப்பட்டவரை போலீசார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். வேலூர் மாவட்டம் குடியாத்தம், தரணம்பேட்டை பஜார் பகுதியில் அரிசி மற்றும் பல்வேறு கடைகள் இயங்கி வருகின்றன. இந்நிலையில் அங்குள்ள அரிசி கடையின் வெளிப்புறத்தில் அங்கு கூலிவேலை செய்பவர்கள், வீடில்லாதவர்கள், ஆதரவற்றவர்கள் சிலர் இரவில் தூங்குவர். இந்த நிலையில் கடந்த மாதம் அதிகாலை ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான அரிசி கடைக்கு வெளியே தூங்கிக் கொண்டிருந்த சின்னக்குழந்தை(75) என்பவர் தலையின் மீது மர்ம ஆசாமி ஒருவர் கல்லை போட்டு கொலை செய்தார்.
இதை பார்த்த அங்கிருந்தவர்கள் அந்த ஆசாமியை பிடிக்க முயன்றபோது அவர் தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து குடியாத்தம் டவுன் போலீசார் வழக்குப்பதிந்து கொலையாளியை அம்மணாங்குப்பம் பகுதியில் வைத்து பிடித்தனர். அப்போதுதான் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரிய வந்தது. இதையடுத்து கொலையாளியான மனநலம் பாதிக்கப்பட்டவரை போலீசார் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

The post தூங்கிய மூதாட்டியை கொன்ற மனநலம் பாதித்தவர் சிக்கினார் மருத்துவமனையில் அனுமதி குடியாத்தத்தில் கடந்த மாதம் appeared first on Dinakaran.

Tags : Gudiyattam ,Taranampet ,Vellore district ,
× RELATED குடியாத்தத்தில் முகமூடி அணிந்து...