×

வாசுதேவநல்லூர், சிவகிரியில் அரசு அலுவலகங்களில் கலெக்டர் கமல் கிஷோர் ஆய்வு

சிவகிரி, மே 16: வாசுதேவநல்லூர், சிவகிரி பகுதியில் அரசு அலுவலகங்களில் தென்காசி கலெக்டர் கமல்கிஷோர் ஆய்வு செய்தார். தென்காசி மாவட்டம் சிவகிரி தாசில்தார் அலுவலகம், வாசுதேவநல்லூர் பேரூராட்சி அலுவலகத்தில் ெதன்காசி மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து அவர் பேரூராட்சியில் நடைபெறும் திட்ட பணி குறித்தும் கேட்டறிந்தார். வாசுதேவநல்லூர் ஒன்றிய அலுவலகம் மற்றும் ஒன்றிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட அவர் குடிநீர் விநியோகம் பற்றி கேட்டறிந்தார். நிகழ்வில் சிவகிரி தாசில்தார் ரவிக்குமார், பேரூராட்சி நிர்வாக அலுவலர் பரமசிவன், பிடிஓக்கள் முத்துபாண்டியன், அருள் செல்வம், நிர்வாக அலுவலர் முனியப்பா, சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் மைதீன் பட்டாணி, மண்டல துணை தாசில்தார் வெங்கட சேகர், தலைமையிடத்து துணை தாசில்தார் சரவணன், இன்ஸ்பெக்டர்கள் (சிவகிரி) சண்முகலட்சுமி, (வாசு) கண்மணி, நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் ஜீவா நந்தன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post வாசுதேவநல்லூர், சிவகிரியில் அரசு அலுவலகங்களில் கலெக்டர் கமல் கிஷோர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Collector ,Kamal Kishore ,Vasudevanallur, Sivagiri ,Sivagiri ,Tenkasi ,Kamalkishore ,Thenkasi District ,Sivagiri Tahsildar Office ,Vasudevanallur Municipality Office ,Dinakaran ,
× RELATED தென்காசி வெண்ணமடை குளத்தில் படகு சேவை தொடக்கம்..!!