×

கனமழை பெய்ய வாய்ப்பு

நாமக்கல், மே 16: நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் கூறியிருப்பதாவது: வரும் நாட்களில், நாமக்கல் பகுதியில் வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். மாவட்டத்தில் சில இடங்களில், கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. வெயிலின் தாக்கம் குறைவாகவே இருக்கும். பகல் வெப்பம் 98.6 டிகிரி, இரவு வெப்பம் 69.8 டிகிரியாக காணப்படும். தென் மேற்கு, கிழக்கு ஆகிய திசைகளில் இருந்து மணிக்கு 12 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post கனமழை பெய்ய வாய்ப்பு appeared first on Dinakaran.

Tags : Namakkal ,Namakkal Veterinary College Meteorological Center ,Dinakaran ,
× RELATED நாமக்கல் அருகே பைக் மீது டிப்பர் லாரி மோதி கல்லூரி மாணவி உயிரிழப்பு..!!