குமாரபாளையம், மே 16: குமாரபாளையத்தில் தீயணைப்பு நிலையம் அமைப்பதற்காக தேர்வு செய்யப்பட்ட இடத்தை, கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார். குமாரபாளையம் தீயணைப்பு நிலையம், தற்போது வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இதற்கான புதிய கட்டிடம் கட்டுவதற்கு, இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த இடத்தை, கலெக்டர் உமா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இது போலவே, குமாரபாளையம் நகராட்சியில் இயங்கி வரும், திடக்கழிவு திட்டத்தின் நுண் உரக்கூடத்தையும், அவர் பார்வையிட்டு, குப்பைகள் பிரிக்கப்பட்டு உரமாக்கப்படுவதை நேரில் ஆய்வு செய்தார். பள்ளிபாளையம் நகராட்சி காவிரி ஆற்றங்கரையோர பகுதிகளை ஆய்வு செய்தார். புறம்போக்கு நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை பார்வையிட்ட அவர், அளவீடு செய்யும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஆய்வின் போது, குமாரபாளையம் தாசில்தார் சண்முகவேல், நகராட்சி ஆணையர் குமாரபாளையம் குமரன், பள்ளிபாளையம் தாமரை மற்றும் வருவாய்துறையினர் உடனிருந்தனர்.
The post தீயணைப்பு நிலையம் கட்ட இடம் தேர்வு appeared first on Dinakaran.