ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் சட்ட விரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் முன்னாள் முதல்வரும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி தலைவருமான ஹேமந்த் சோரன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையே, மாநில ஊரக வளர்ச்சித் துறையில் ஒப்பந்தம் தர கமிஷன் வாங்கிய விவகாரத்தில் முன்னாள் தலைமை பொறியாளர் வீரேந்திர குமார் ராம் கைது செய்யப்பட்டார். அவர் அளித்த தகவலின் பேரில் பாகூர் தொகுதி எம்எல்ஏவும் மாநில அமைச்சருமான ஆலம்கிர் ஆலமின் தனிப்பட்ட செயலாளரும், மாநில நிர்வாக சேவை அதிகாரியுமான சஞ்சீவ்குமார் லால், அவரது வீட்டு வேலைக்காரர் ஜஹாங்கீர் ஆலம் உள்ளிட்டவர்களின் வீடுகளில் அமலாக்கத்துறை சமீபத்தில் சோதனை நடத்தியது. அதில் ஜஹாங்கீர் வீட்டில் ரூ.32 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து சஞ்சீவ்குமார் லால், ஜஹாங்கீர் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து அமைச்சர் ஆலம்கிர் ஆலமிடம் நேற்று முன்தினம் 9 மணி நேரம் ஈடி அதிகாரிகள் விசாரித்தனர். நேற்று 6 மணி நேர விசாரணையை தொடர்ந்து ஆலம்கிர் ஆலமை சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.
The post சட்டவிரோத பண பரிவர்த்தனை ஜார்க்கண்ட் அமைச்சர் ஆலம்கீர் ஆலம் கைது: அமலாக்கத்துறை நடவடிக்கை appeared first on Dinakaran.