×

மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட்டில் வேட்பு மனு தாக்கல் நிறைவு

புதுடெல்லி: தொகுதி பங்கீடு இழுபறிகளுக்கு மத்தியில் மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட்டில் வேட்பு மனு தாக்கல் நிறைவு பெற்றது. ஜார்கண்டில் வரும் நவ. 13ல் முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜார்க்கண்ட் சட்டப்பேரவைக்கு நவ.13, 20ம் தேதியும், மகாராஷ்டிரா சட்டப்பேரவைக்கு வரும் நவம்பர் 20ம் தேதி ஒரே கட்டமாக 288 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான மனுத்தாக்கல் கடந்த 22ம் தேதி தொடங்கியது. நேற்றுடன் ஜார்க்கண்டில் 2ம் கட்டமாக 38 தொகுதிகளுக்கும், மகாராஷ்டிராவில் உள்ள 288 தொகுதிகளுக்கும் வேட்பு மனு தாக்கல் நிறைவு பெற்றது.

மகாராஷ்டிராவில் ஆளும் பாஜக, சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே), தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்) ஆகிய கட்சிகளின் மகாயுதி கூட்டணிக்கும், காங்கிரஸ், சிவ சேனா (உத்தவ் தாக்கரே), தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்) கட்சிகளின் மகா விகாஸ் அகாடி கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. ஜார்க்கண்டில் ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான காங்கிரஸ், இடதுசாரிகள், ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளின் கூட்டணிக்கும், எதிர்கட்சியான பாஜக தலைமையிலான கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

The post மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட்டில் வேட்பு மனு தாக்கல் நிறைவு appeared first on Dinakaran.

Tags : Jharkhand, Maharashtra ,New Delhi ,Jharkhand ,Jharkhand Legislature ,Maharashtra Legislature ,Maharashtra, Jharkhand ,
× RELATED டிரோன் எதிர்ப்பு வெடிபொருள் தயாரிக்க விண்ணப்பம் வரவேற்பு