×

சிங்கப்பூர் புதிய பிரதமராக லாரன்ஸ் வோங் பதவியேற்பு

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக பிரதமராக இருந்த லீ சியென் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனை தொடர்ந்து துணை பிரதமராக இருந்த லாரன்ஸ் வோங் பிரதமராகியுள்ளார். இருவரும் ஆளும் பிஏபி கட்சியை சேர்ந்தவர்கள். லாரன்ஸ் வோங் சிங்கப்பூரின் நான்காவது பிரதமராக நேற்று பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு அதிபர் தர்மன் சண்முகரத்னம் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். புதிய பிரதமர் பொறுப்பேற்றபோதிலும், அமைச்சரவையில் மிகப்பெரிய மாற்றம் செய்யப்படவில்லை.

The post சிங்கப்பூர் புதிய பிரதமராக லாரன்ஸ் வோங் பதவியேற்பு appeared first on Dinakaran.

Tags : Lawrence Wong ,Singapore ,Lee Hsien ,Deputy ,PAP ,
× RELATED சிங்கப்பூர் அமைச்சராக இந்திய வம்சாவளி நியமனம்