- பிரதான விஜயன்ஸ் அதிகாரி
- ஜெய்ப்பூர்
- ராஜஸ்தான்
- கோலிஹான் சுரங்கம்
- ஜுன்ஜுனு மாவட்டம்
- நீம் கானா மாவட்டம்
- பாதிக்கப்பட்ட
- தின மலர்
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் லிப்ட் கம்பி அறுந்து சுரங்கத்தில் சிக்கிய 14 அதிகாரிகள் மீட்கப்பட்ட நிலையில், தலைமை விஜிலென்ஸ் அதிகாரி உயிரிழந்தார். ராஜஸ்தான் மாநிலத்தில் நீம் கானா மாவட்டத்தில் ஜுன்ஜுனு மாவட்டத்தில் உள்ள கோலிஹான் சுரங்கத்தில் நேற்று முன்தினம் ஆய்வு செய்வதற்காக அதிகாரிகள் குழுவினர் வந்தனர். கொல்கத்தா இந்துஸ்தான் காப்பர் லிமிடெட் நிறுவனத்தை சேர்ந்த விஜிலென்ஸ் குழு உட்பட 15 அதிகாரிகள் குழுவினர் வந்திருந்தனர். இவர்கள் லிப்ட் மூலமாக சுரங்கத்திற்குள் சென்று ஆய்வு மேற்கொண்டனர். அதன் பின்னர் சுரங்கத்தில் இருந்து வெளியேறுவதற்காக லிப்டில் ஏறியபோது லிப்ட் கம்பி அறுந்து விழுந்தது.
இதன் காரணமாக 15 பேரும் சுரங்கத்தில் 1,875 அடி ஆழத்தில் சிக்கினார்கள். தகவல் அறிந்து மீட்பு குழுவினர் அங்கு விரைந்தனர். மருத்துவ குழுவினரும் வரவழைக்கப்பட்டனர். சுரங்கத்தில் சிக்கியவர்களை மீட்பதற்காக இரவு முழுவதும் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதனை தொடர்ந்து நேற்று முதல் கட்டமாக 8 பேரும், பின்னர் 7 பேரும் மீட்கப்பட்டனர். காயமடைந்த நிலையில் மீட்கப்பட்ட 14 பேர் ஜெய்ப்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் இந்துஸ்தான் காப்பர் லிமிடெட் நிறுவனத்தின் தலைமை விஜிலென்ஸ் அதிகாரி உபேந்திர குமார் பாண்டே உயிரிழந்தார்.
The post லிப்ட் கம்பி அறுந்து விழுந்து சுரங்கத்தில் சிக்கிய 14 அதிகாரிகள் மீட்பு: தலைமை விஜிலென்ஸ் அதிகாரி பலி appeared first on Dinakaran.