×

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்த தாயை கொன்ற தெலுங்கு தேசம் நிர்வாகி: ஆந்திராவில் பரபரப்பு

திருமலை: ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்ததால் தாயை சுத்தியலால் அடித்து கொலை செய்த தெலுங்கு தேசம் நிர்வாகியை போலீசார் கைது செய்தனர். ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டம் கம்பத்தூர் கிராமத்தை ேசர்ந்தவர் வெங்கடேசுலு, தெலுங்கு தேசம் நிர்வாகி. இவரது தாய் வட்டே சுங்கம்மா(45). இந்நிலையில் கடந்த ஐந்து ஆண்டுகளில் அரசு மூலம் கிடைத்த நலத்திட்டத்தை கருத்தில் கொண்டு கடந்த 13ம் தேதி நடந்த தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு சுங்கம்மா வாக்களித்துள்ளார். இதுகுறித்து தன் மகன் வெங்கடேசுலுவிடம் கூறினாராம். இதனால் ஆத்திரமடைந்த வெங்கடேசுலு நேற்று மது அருந்தி விட்டு வீட்டுக்கு வந்து சுங்கம்மாவிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது கண்ணிமைக்கும் நேரத்தில் தாய் என்று கூட பார்க்காமல் சுத்தியலால் சுங்கம்மாவை அடித்துள்ளார். அதில் ரத்த வெள்ளத்தில் சுங்கம்மா மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். தகவலறிந்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதற்கிடையே வெங்கடேசுலு தப்பியோடிவிட்டார். பின்னர் விரைந்து வந்த போலீசார் சடலத்தை மீட்டு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கம்பத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த வெங்கடேசுலுவை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்ததால் பெற்ற தாயை மகனே அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்த தாயை கொன்ற தெலுங்கு தேசம் நிர்வாகி: ஆந்திராவில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : YSR ,Desam ,Congress party ,Pandemonium ,Andhra Pradesh ,Tirumala ,Y.S.R. ,Yesarandavar Venkatesulu ,Kampathur ,Ananthapuram district, Andhra ,
× RELATED தெலுங்கு தேசத்துக்கு 4 எம்எல்ஏக்கள்: ஒய்எஸ்ஆர் கட்சி எம்பி கணிப்பு