×

மத அடிப்படையிலான பட்ஜெட், கல்வி, வேலைவாய்ப்பை பாஜ அனுமதிக்காது: பிரதமர் மோடி உறுதி

நாசிக்: வடக்கு மகாராஷ்டிராவின் நாசிக் மாவட்டம் பிம்பால்கான் பஸ்வந்த் என்ற இடத்தில் நடந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில்“ தற்போது ஆட்சியை பிடிக்க நினைக்கும் காங்கிரஸ் மத அடிப்படையில் இடஒதுக்கீடு கொண்டு வர விரும்புகிறது. பழங்குடியின, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டை பறித்து முஸ்லிம்களுக்கு கொடுக்க காங்கிரஸ் நினைக்கிறது. கடந்த 10 ஆண்டுகளாக மத வேறுபாடின்றி இலவச ரேஷன், மின்சாரம், குடிநீர், வீடுகள், எரிவாயு இணைப்பை பாஜ அரசு வழங்கி உள்ளது. மத அடிப்படையிலான இடஒதுக்கீடு மிகவும் ஆபத்தானது. அதை பாஜ அரசு ஒருபோதும் செய்யாது” என்று தெரிவித்தார்.

The post மத அடிப்படையிலான பட்ஜெட், கல்வி, வேலைவாய்ப்பை பாஜ அனுமதிக்காது: பிரதமர் மோடி உறுதி appeared first on Dinakaran.

Tags : BJP ,PM Modi ,Nashik ,Pimpalgaon Paswant ,North Maharashtra ,Nashik district ,Modi ,Congress ,Dinakaran ,
× RELATED வசமாக சிக்கியவர்களே அமலாக்கத்துறை,...