×

மீண்டும் முதல்வராக நவீன் பட்நாயக் ஜூன் 9ம் தேதி பதவியேற்பார்: வி.கே.பாண்டியன் உறுதி

புவனேஷ்வர்: ஒடிசாவில் மீண்டும் முதல்வராக நவீன் பட்நாயக் ஜூன் 9ம் தேதி பதவியேற்பார் என்று அவரது உதவியாளர் விகே பாண்டியன் தெரிவித்துள்ளார். ஒடிசாவில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு 13ம் தேதி நடந்து முடிந்தது. மக்களவை தேர்தல் பல்வேறு கட்டங்களாக ஜூன் 1ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்நிலையில் ஆளும் பிஜூ ஜனதா தளம் கட்சியின் தலைவரும் முதல்வருமான நவீன் பட்நாயக் உடன் அவரது நெருங்கிய உதவியாளரான விகே பாண்டியன் தியோகர் மாவட்டத்திற்கு சென்றபோது நடந்த உரையாடலின் சிறு பகுதியை பகிர்ந்து கொண்டுள்ளார். இதில் விகே பாண்டியன், ‘‘கடவுள் ஜகந்நாத் மற்றும் மக்களின் ஆசிர்வாதத்துடன் நமது விருப்பமான முதல்வர் நவீன்பட்நாயக் ஜூன் 9ம் தேதி மீண்டும் பதவியேற்பார். முதல்வரின் முதல் உத்தரவு 90 சதவீத ஒடிசா மக்களுக்கு இலவச மின்சாரம் விநியோகிப்பது என்பதாகும். இது நவீன் பட்நாயக்கின் உத்தரவாதமாகும். சங்கு சின்னத்தின் உத்தரவாதமாகும்” என்று கூறியுள்ளார்.

The post மீண்டும் முதல்வராக நவீன் பட்நாயக் ஜூன் 9ம் தேதி பதவியேற்பார்: வி.கே.பாண்டியன் உறுதி appeared first on Dinakaran.

Tags : Naveen Patnaik ,CM ,VK Pandian ,Bhubaneswar ,Odisha ,Chief Minister ,Lok Sabha elections ,
× RELATED ஒடிசா பிரசாரத்தில் 9 சேம் சைடு கோல்...