×

சக வீரர் மெய்ராபாவிடம் பிரணாய் அதிர்ச்சி தோல்வி

பாங்காக்: தாய்லாந்து ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய நட்சத்திரம் எச்.எஸ்.பிரணாய் சக வீரரிடம் அதிர்ச்சி தோல்வியடைந்து ஏமாற்றத்துடன் வெளியேறினார். உலக தரவரிசையில் 84வது இடத்தில் உள்ள மெய்ரபா லுவாங் மய்ஸ்னம் உடன் நேற்று மோதிய எச்.எஸ்.பிரணாய் (9வது ரேங்க்) 19-21, 18-21 என நேர் செட்களில் போராடி தோற்றார். விறுவிறுப்பான இப்போட்டி 55 நிமிடங்களுக்கு நீடித்தது. ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி – சிராக் ஷெட்டி இணை 34 நிமிடங்களில் 21-13, 21-13 என நேர் செட்களில் மலேசியாவின் நூர் முகமது அஜ்ரியன் அயூப் – தன் வீ கிளாங் ஜோடியை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை அஷ்மிதா சாலிஹா 19-21, 21-15, 21-14 என்ற செட்களில் இந்தோனேசியாவின் எஸ்தர் நுருமியை வீழ்த்தினார். இந்த ஆட்டம் 54 நிமிடங்கள் நடந்தது. அதே சமயம் மற்ற இந்திய வீராங்கனைகள் மாளவிகா மன்சூட், உன்னதி ஹூடா, சமியா இமாத், வீரர்கள் கிரண் ஜார்ஜ், தகுதிச் சுற்றின் மூலம் முன்னேறிய சதீஷ்குமார் கருணாகரன் ஆகியோர் முதல் சுற்றிலேயே தோற்று வெளியேறினர்.

The post சக வீரர் மெய்ராபாவிடம் பிரணாய் அதிர்ச்சி தோல்வி appeared first on Dinakaran.

Tags : Pranay ,Meiraba ,BANGKOK ,HS Pranay ,Thailand Open tennis series ,HS ,Pranai ,Meirapha Luang Maisnam ,Meirapha ,Dinakaran ,
× RELATED மியான்மரின் மூத்த அரசியல் தலைவர் டின் ஓ காலமானார்