×

விடுதலைப் புலிகள் நினைவுதினம் இலங்கையில் தமிழர் பகுதியில் கண்காணிப்பு: பாதுகாப்பு படையினர் உஷார்

கொழும்பு: இலங்கையில் தமிழர்கள் அதிகம் வாழும் வடக்கு மற்றும் கிழக்கு பிராந்தியங்களில், தடையை மீறி விடுதலைப் புலிகள் நினைவுதினம் அனுசரிக்கப்படலாம் என்பதால் பாதுகாப்பு படையினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். இலங்கையில் நடந்த உள்நாட்டு போர் 2009ம் ஆண்டு முடிவுக்கு வந்தது. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபகாகரன் 2009 மே 19ம் தேதி முள்ளிவாய்க்கால் பகுதியில் சடலமாக கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து போர் நிறைவடைந்தது. இதில் அப்பாவி தமிழர்கள் மற்றும் விடுதலைப் புலிகள் இயக்கத்தை சேர்ந்த பலர் கொல்லப்பட்டனர்.

தமிழீழ இறுதிப் போரின் 15ம் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், போரில் உயிரிழந்த விடுதலைப் புலிகளுக்கு நினைவு தினம் அனுசரிக்க தமிழர்கள் அதிகம் வாழும் வடக்கு மற்றும் கிழக்கு பிராந்தியங்களில் முயற்சிகள் நடப்பதாக இலங்கை ராணுவத்திற்கு தகவல் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இதுபோன்ற நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு இலங்கை நீதிமன்றங்கள் தடை விதித்துள்ள நிலையில், வரும் 20ம் தேதி வரை நினைவு நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதை தடுக்கும் வகையில் ராணுவம், போலீசார் மற்றும் அதிரடிப்படையினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். பாதுகாப்பு படையினர் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

The post விடுதலைப் புலிகள் நினைவுதினம் இலங்கையில் தமிழர் பகுதியில் கண்காணிப்பு: பாதுகாப்பு படையினர் உஷார் appeared first on Dinakaran.

Tags : LTTE Memorial Day ,Lanka ,Tamil ,Colombo ,Sri Lanka ,regions ,LTTE ,LTTE Memorial Day Surveillance ,Dinakaran ,
× RELATED இந்தியா – இலங்கை பாலம்: ஆய்வு பணி விரைவில் நிறைவு