- மோடி
- தமிழ்நாடு காங்கிரஸ்
- ஜனாதிபதி
- Sadal
- கடூர்
- காங்கிரஸ்
- தர்மபுரி
- செல்வப்பெருந்தகாய்
- மக்களவை
- பாஜக
- சாடல்
- தின மலர்
கடத்தூர்: தர்மபுரியில் மாவட்ட காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டம், நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அளித்த பேட்டி: இதுவரை 379 மக்களவை தொகுதிகளுக்கு தேர்தல் முடிந்திருக்கிறது. 100 இடங்கள் கூட கிட்டாது என பாஜவுக்கு தகவல் கிடைத்தவுடன், இப்போது இஸ்லாமியர்களை பற்றி மோடி புகழ்ந்து பேசி, அவர்களிடம் மன்றாடி மன்னிப்பு கேட்டுக் கொண்டிருக்கிறார். பாஜ வெறுப்பு அரசியலுக்கான கட்சி. ஆர்எஸ்எஸ் சித்தாந்தம், மனித நேயத்திற்கு எதிரானது. இதை அகற்ற வேண்டும். முதல்கட்ட தேர்தலில், மோடி எருமை மாடு அரசியல் பேசினார். 2ம் கட்டத்தில் பாகிஸ்தான் அரசியல் பேசினார். 3ம்கட்ட தேர்தலில் பிரிவினை வாதத்தை பற்றி பேசினார். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், ஒருவர் சொத்தை இன்னொருவருக்கு கொடுத்து விடுவார்கள் என்று கூறினார். இப்போது 4ம்கட்ட தேர்தல் முடிந்த பிறகு, இஸ்லாமியர்களை நாங்கள் பிரித்துப் பார்ப்பதில்லை என்று கூறுகிறார். பாஜவின் முகமூடி கிழிக்கப்பட்டிருக்கிறது. இஸ்லாமியர் பற்றி வெறுப்பு அரசியல் பேசியவர், வாக்குகள் பெறவேண்டும் என்பதற்காக, இப்போது குட்டிக்கரணம் அடிக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.
The post இஸ்லாமியர்கள் பற்றி வெறுப்பு அரசியல் பேசிய மோடி திடீர் குட்டிக்கரணம்: தமிழக காங். தலைவர் சாடல் appeared first on Dinakaran.