- பஞ்சாப்
- ராயல்ஸ்
- குவஹாத்தி
- பஞ்சாப் கிங்ஸ்
- ஐபிஎல் லீக்
- ராஜஸ்தான் ராயல்ஸ்
- ராஜஸ்தான்
- பார்சபரா ஸ்டேடியம்
- ஜெயஸ்வால்
- காட்மோர்
- தின மலர்
கவுகாத்தி: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், பஞ்சாப் கிங்ஸ் 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. பர்ஸபாரா ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற ராஜஸ்தான் முதலில் பேட் செய்தது. ஜெய்ஸ்வால், காட்மோர் இணைந்து இன்னிங்சை தொடங்கினர். ஜெய்ஸ்வால் 4 ரன் எடுத்து கிளீன் போல்டாக அதிர்ச்சி தொடக்கமாக அமைந்தது. இதனால் பொறுமையாக விளையாடிய காட்மோர் – சஞ்சு சாம்சன் ஜோடி 2வது விக்கெட்டுக்கு 36 ரன் சேர்த்தது. இருவரும் தலா 18 ரன் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழக்க, ராஜஸ்தான் 42 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து திணறியது.
இந்த நிலையில், ரியான் பராக் – ஆர்.அஷ்வின் இணைந்து 4வது விக்கெட்டுக்கு 50 ரன் சேர்த்து நம்பிக்கை அளித்தனர். அஷ்வின் 28 ரன் (19 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி அவுட்டானார். அடுத்து வந்த துருவ் ஜுரெல் 0, பாவெல் 4, டொனோவன் 7 ரன்னில் அணிவகுக்க… ராஜஸ்தான் மீண்டும் சரிவை சந்தித்தது. பராக் 48 ரன் (34 பந்து, 6 பவுண்டரி) விளாசி ஹர்ஷல் பந்துவீச்சில் எல்பிடபுள்யு ஆனார். போல்ட் 12 ரன் எடுத்து கடைசி பந்தில் ரன் அவுட்டாக, ராஜஸ்தான் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 144 ரன் எடுத்தது.
ஆவேஷ் 3 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். பஞ்சாப் பந்துவீச்சில் சாம் கரன், ஹர்ஷல், ராகுல் தலா 2, அர்ஷ்தீப், நாதன் எல்லிஸ் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய பஞ்சாப் 18.5 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 145 ரன் எடுத்து, 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. அதிகபட்சமாக சாம் கரன் 63 ரன் (41 பந்து, 5 பவுண்டரி, 6 சிக்சர்) விளாசினார். ரிலே ரோஸ்சோவ் 13 பந்துகளில் 22 ரன் எடுத்தார். ராஜஸ்தான் பந்துவீச்சில் ஆவேஷ்கான், சகால் தலா 2 விக்கெட், போல்ட் 1 விக்கெட் வீழ்த்தினர். தொடர்ச்சியாக 4வது தோல்வியை சந்தித்தாலும் ராஜஸ்தான் 2வது இடத்தில் நீடிக்கிறது.
The post 5 விக்கெட் வித்தியாசத்தில் ராயல்சை வீழ்த்தியது பஞ்சாப் appeared first on Dinakaran.