- Icourt
- மதுரை
- அய்கோர்ட் கிளை
- சாமிநாதன்
- திண்டுக்கல் மாவட்டம்
- திண்டுக்கல்
- பொம்மன்பட்டி கோயில் திருவிழா
- ஐகோர்ட் கிளை
- தின மலர்
மதுரை : கோயில் விழாக்களில் அனைத்து சமூகத்தவரும் பங்கேற்று வழிபட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐகோர்ட் கிளை தெரிவித்துள்ளது. திண்டுக்கல் வெள்ளபொம்மன்பட்டி கோயில் திருவிழாவில் பட்டியல் இன மக்கள் வழிபடும் வகையில் நடவடிக்கை கோரி திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சாமிநாதன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் வேல்முருகன், ராஜசேகர் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில்,”கோயில் என்பது அனைவருக்கும் பொதுவானது; அனைத்து சமூகத்தவர்களும் பங்கேற்க வேண்டும். மே 19-ல் நடக்கும் திருவிழாவில் அனைத்து சமூகத்தினரும் பங்கேற்க, வழிபட நடவடிக்கை எடுக்க வேண்டும். தீண்டாமை சம்பவம் நடந்துள்ளதா? என்பது குறித்து வேடசந்தூர் தாசில்தார் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய ஆணையிடுகிறோம்.அமைதி பேச்சுவார்த்தை கூட்டத்தில் எடுக்கப்படும் நடவடிக்கை குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்படுகிறது,”இவ்வாறு தெரிவித்தார்.
The post கோயில் என்பது அனைவருக்கும் பொதுவானது; திருவிழாவில் அனைத்து சமூகத்தவர்களும் பங்கேற்க வேண்டும் : ஐகோர்ட் கிளை கருத்து appeared first on Dinakaran.