×

தமிழ்நாடு, புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அடுத்த 5 நாட்களுக்கு அநேக இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் “வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை, கோவிலங்குளத்தில் தலா 8 செ.மீ. மழை பதிவு. அடுத்த 24 மணி நேரத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள், தென்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு. தேனி, தென்காசி, விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மற்றும் மிக கனமழைக்கு வாய்ப்பு. சென்னையில் 3 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்; ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு” என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

The post தமிழ்நாடு, புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் appeared first on Dinakaran.

Tags : Puducherry, Tamil Nadu ,CHENNAI ,Meteorological Department ,Tamil Nadu ,Puducherry ,Karaikal ,
× RELATED 40 தொகுதிகளில் திமுக கூட்டணி அமோக...