தேன்கனிக்கோட்டை: தேன்கனிக்கோட்டை அருகே, உணவு தேடி வந்து நெல்லுகுந்தி சாலையில் ஒன்றை யானை உலாவியதால் அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை பகுதியில் போதிய மழையின்றி, வனப்பகுதி வறண்டு கிடக்கின்றன. வனப்பகுதியில் உள்ள குளம், குட்டைகளில் தண்ணீர் வற்றிப்போனது.
இதையடுத்து உணவு மற்றும் தண்ணீர் தேடி யானைகள், மான்கள் வனப்பகுதியை விட்டு வெளியேறி, கிராம பகுதிகளில் சுற்றி வருகின்றன. இதனை தடுக்க வனப்பகுதியில் ஆங்காங்கே தண்ணீர் தொட்டிகளை கட்டியுள்ள வனத்துறையினர், டிராக்டர் மூலம் தொட்டிகளில் தண்ணீரை நிரப்பி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று, அய்யூர் வனப்பகுதியில் இருந்து வந்த ஒற்றை யானை, நெல்லுகுந்தி கிராமத்திற்கு செல்லும் சாலையில் நின்றிருந்தது. இதனால், அந்த வழியாக டூவீலர், கார்களில் சென்றவர்கள் தங்களின் வாகனத்தை நிறுத்தி விட்டு, செல்போன்களில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். நீண்ட நேரமாக ஒன்றை யானை சாலையில் நின்று உலாவியதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் ெசல்ல முடியாமல் சிரமத்துக்கு ஆளாகினர். கூட்டம் அதிகமாக கூடிய நிலையில், பொதுமக்கள் சிலர் கூடி சத்தம் எழுப்பினர். இதையடுத்து ஒற்றை யானை சாலையோரம் உள்ள மூங்கில் காட்டிற்குள் சென்றது. இதையடுத்து வாகன ஓட்டிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.
The post தேன்கனிக்கோட்டை அருகே சாலையில் உலா வந்த ஒற்றை யானை: வாகன ஓட்டிகள் அச்சம் appeared first on Dinakaran.