டெல்லி: பண மோசடி வழக்கில் ஜாமின் கோரிய முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனு மீதான விசாரணை நாளைக்கு தள்ளிவைத்துள்ளது. இடைக்கால ஜாமின் வழங்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்று செந்தில் பாலாஜி தரப்பு கூறியுள்ளது. மருத்துவ காரணங்களை சுட்டிக்காட்டி ஜாமின் கோரிய மனுவை உச்சநீதிமன்றம் ஏற்கனவே தள்ளுபடி செய்தது. சில விசாரணை கைதிகள் 2, 3 ஆண்டுகள் சிறையில் உள்ளனர் என்று நீதிபதிகள் கூறியுள்ளனர். மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை உச்சநீதிமன்றம் தள்ளிவைத்தது.
The post பண மோசடி வழக்கில் ஜாமின் கோரிய செந்தில் பாலாஜியின் மனு மீதான விசாரணை நாளை தள்ளிவைப்பு appeared first on Dinakaran.