×

வெளிநாட்டு முகவர் மசோதாவை சட்டமாக்க கடும் எதிர்ப்பு.. ஜார்ஜியா நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் இடையே மோதல்..!!

ஜார்ஜியா: ஜார்ஜியா நாட்டு நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தின் போது எம்.பி.க்கள் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஜார்ஜியா நாட்டில் பெரும் சர்ச்சைக்கும், கொந்தளிப்புக்கும் வித்திட்டுள்ள வெளிநாட்டு முகவர் சட்ட மசோதா, அந்த நாட்டு நாடாளுமன்றத்திலும் மோதலை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவின் சட்டம் என்று விமர்சிக்கப்படும் இந்த மசோதா மீதான விவாதத்தின் போது எதிர்க்கட்சி எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் நாடாளுமன்றத்தில் தள்ளு முள்ளு ஏற்பட்டது.

சோவியத் ஒன்றியத்தில் இருந்த ஐரோப்பியா, ஆசிய நாடான ஜார்ஜியாவில் கடந்த ஓர் ஆண்டுக்கு மேலாக வெளிநாட்டு முகவர் சட்ட மசோதாவை நிறைவேற்ற அந்த நாட்டின் ஆளும் கட்சியான ஜார்ஜியன் ட்ரீம் பார்ட்டி முயன்று வருகிறது. ஜார்ஜியாவில் வெளிநாட்டு நிதி உதவியுடன் செயல்படும் ஊடகங்கள் மற்றும் அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் உள்நாட்டில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன என்பது ஆளும் கட்சியின் குற்றச்சாட்டு. ஆனால் ரஷ்யாவை போன்று ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்காவும், மனித உரிமை அமைப்புகளை இலக்கு வைக்கவுமே இந்த சட்டம் இயற்றப்படுவதாக குற்றச்சாட்டி நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன.

 

 

The post வெளிநாட்டு முகவர் மசோதாவை சட்டமாக்க கடும் எதிர்ப்பு.. ஜார்ஜியா நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் இடையே மோதல்..!! appeared first on Dinakaran.

Tags : Georgia ,Parliament ,Parliament of Georgia ,Russia ,Dinakaran ,
× RELATED ஜார்ஜியா மாகாண செனட் சபை தேர்தல்: தமிழர் அஸ்வின் ராமசாமி போட்டி