×

சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் 1165 செல்லப்பிராணிகளுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது: மாநகராட்சி தகவல்

சென்னை: சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் 1165 செல்லப்பிராணிகளுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது என்று மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது. சென்னையில் கடந்த வாரம் பூங்காவில் விளையாடிய சிறுமியை 2 வளர்ப்பு நாய்கள் கடித்து குதறிய சம்பவத்தை தொடர்ந்து, மாநகராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதில் முக்கியமாக செல்லபிராணிகளுக்கு உரிமம் பெறுவது கட்டாயம் என்ற அறிவிப்பை தொடர்ந்து, செல்லப்பிராணிக்கு உரிமம் பெற ஏராளமானோர் ஆர்வம் காட்ட துவங்கியுள்ளனர்.

செல்லப்பிராணிகள் வளர்க்க உரிமம் பெற விரும்புபவர்கள், சென்னை மாநகராட்சியின் www.chennai < http://www.chennai >corporation.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்து, வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றின் புகைப்படம் ஆகியவற்றை பதிவேற்றம் செய்து உறுதி மொழியை சமர்ப்பிக்க வேண்டும். இந்த விவரங்களை சம்பந்தப்பட்ட மண்டல கால்நடை உதவி மருத்துவர் சரிபார்த்து அங்கீகரித்த பின்னர் பதிவு செய்யப்பட்ட அலைபேசி எண்ணிற்கு பணம் செலுத்துவதற்கான குறுஞ்செய்தி அனுப்பப்படும். அதன் பிறகு செல்லப்பிராணிகளின் உரிமம் பதிவிறக்கம் செய்வதற்கான இணைப்பு உருவாகும். அதனை கொண்டு செல்லப்பிராணிகளின் உரிமத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இந்நிலையில் அதிக அளவில் உரிமையாளர்கள் இணைய வழியில் செல்லப்பிராணிகள் உரிமம் பெற்று வருகின்றனர். அதன்படி, கடந்த ஒரு வாரத்தில் 1165 செல்லப்பிராணிகளுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது. 2540 விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளது. 4160 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. மேலும், செல்லப் பிராணிகளுக்கு உரிமம் வழங்கும் மாநகராட்சியின் இணையதளம் தொழில்நுட்ப கோளாறினால் முடங்கியது. இன்று மாலைக்குள் இணையதளம் சரி செய்யப்படும் என சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

The post சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் 1165 செல்லப்பிராணிகளுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது: மாநகராட்சி தகவல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Municipal Corporation ,
× RELATED “சாலைகளில் திரியும் மாடுகளை பறிமுதல்...