- ரேஷன் கடைகள்
- திருவாரபூண்டி
- திருவாரூர் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு மையம்
- தலைமை வழக்கறிஞர்
- நாகராஜன்
- உணவுத் துறை அமைச்சர்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
திருத்துறைப்பூண்டி, மே 15: திருவாரூர் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் வழக்கறிஞர் நாகராஜன் உணவு த்துறை அமைச்சருக்கு அனுப்பிய மனுவில் கூறியள்ளதாவது.தமிழகம் முழுவதும் அத்தியாவசிய பொருட்கள் அரிசி, சர்க்கரை கோதுமை பாமாயில் மண்ணெண்ணெய் ஆகியவை மத்திய அரசு மூலம் வழங்கப்பட்டு ரேஷன் கடைகள் மூலம் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது.கோதுமை 5 கிலோவும் மண்ணெண்ணெய் 250 மில்லியும் பாமாயில் ஒரு லிட்டரும் மாதம் ஒரு முறை மட்டுமே வழங்கப்படுகிறது. பாமாயில் லிட்டர் முப்பது ரூபாய்க்கும் மண்ணெண்ணெய் ரூபாய் 15க்கும் விற்கப்படுகிறது. வெளிமார்க்கெட்டில் சமையல் எண்ணெய் ரூ120 க்கு விற்கப்படுகிறது. மண்ணெண்ணெய் வெளி மார்க்கெட்டில் லிட்டர் ரூபாய் 120க்கு விற்கப்படுகிறது.
கடந்த இரண்டு மாதங்களாக கோதுமை பாமாயில் மண்ணெண்ணெய் முழுவதுமாக வழங்கப்படுவதில்லை. தமிழகம் முழுவதும் மூன்று லட்சத்துக்கு மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் பொருட்களை ரேஷன் கடைகள் மூலம் பெற்று வந்தனர். தற்பொழுது ரேஷன் கடைகளில் இந்த பொருட்கள் வழங்கப்படாமல் இருப்பதால் பொதுமக்கள் கடைகளில் மிக அதிக விலை கொடுத்து சமையல் எண்ணெய் மண்ணெண்ணெய் போன்றவற்றை வாங்க நேரிடுகிறது. இதனால் குடும்பச் செலவு அதிகமாக ஏற்படுகிறது.
மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மத்திய அரசால் பாமாயில் மண்ணெண்ணெய் போன்றவை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு மாநில அரசுக்கு குடும்ப அட்டைக்கு ஒரு லிட்டர் வீதம் கொடுக்க தேவையான அளவு அனுப்பப்படுகிறது.ஆனால் விசாரித்த வகையில் மத்திய அரசிடமிருந்து போதிய அளவு பொருட்கள் மாதம் ஒன்பது லட்சம் லிட்டர் சமையல் எண்ணையும் ஒருலட்சம் லிட்டர் அனுப்பப்படாமல் மிகவும் குறைக்கப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது.
இதனால் தமிழக ரேஷன் கடைகளில் இந்த பொருட்கள் வழங்கப்படாமல் இருந்து வருகிறது. ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காத போது இந்த சூழ்நிலையை தனியார் வியாபாரிகள் பயன்படுத்திக் கொண்டு அதிக விலைக்கு சமையல் எண்ணெய் கோதுமை மண்ணெண்ணெய் போன்றவற்றை அதிக விலைக்கு விற்று சுயலாபம் அடைகிறார்கள்.உணவுத்துறை அதிகாரிகள் இணைந்து அத்தியாவசிய பொருட்களை பதுக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து பொருட்களை குறைந்த விலைக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இது சம்பந்தமாக நுகர்வோர் பெருமக்களிடமிருந்து பொருள் தட்டுப்பாடு குறித்து புகார் மனு வரப்பட்டு உரிய அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டும் நடவடிக்கை இல்லை.
ஆதலால் தமிழக உணவுத்துறை உடனடியாக நடவடிக்கை எடுத்து மண்ணெண்ணெய் கோதுமை மற்றும் சமையல் எண்ணெய் போதுமான அளவு மத்திய அரசில் இருந்து பெற்று அல்லது தனியாரிடமிருந்து கொள்முதல் செய்து ரேஷன் கடைகள் மூலம் குறைந்த விலையில் பொருட்கள் கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருவாரூர் மாவட்டம் நுகர்வோர் பாதுகாப்பு மையம் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது. இல்வாறு அவர் கூறியுள்ளார்.
The post ரேஷன் கடைகளில் மண்ணெண்ணெய், கோதுமை, பாமாயில் வழங்க வேண்டும் appeared first on Dinakaran.