- போரல்
- ஸ்டப்ஸ்
- தில்லி
- லக்னோ
- புது தில்லி
- தில்லி தலைநகரம்
- ஐபிஎல் லீக்
- லக்னோ சூப்பர் ஜயண்ட்ஸ்
- அருண் ஜெட்லி அரங்கம்
- போரெல்
- ஜேக் ஃப்ரேசர்
- தின மலர்
புதுடெல்லி: லக்னோ சூப்பர் ஜயன்ட்ஸ் அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், டெல்லி கேப்பிடல்ஸ் அணி 19 ரன் வித்தியாசத்தில் வென்றது. அருண் ஜெட்லி அரங்கில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற லக்னோ முதலில் பந்துவீசியது. போரெல், ஜேக் பிரேசர் இணைந்து டெல்லி இன்னிங்சை தொடங்கினர். அர்ஷத் கான் வேகத்தில் அதிரடி வீரர் பிரேசர் டக் அவுட்டாகி வெளியேற, டெல்லி அணிக்கு அதிர்ச்சி தொடக்கமாக அமைந்தது.
அடுத்து போரெல் – ஹோப் ஜோடி சேர்ந்து 2வது விக்கெட்டுக்கு அதிரடியாக 92 ரன் சேர்த்தனர். ஹோப் 38 ரன் (27 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்), போரெல் 58 ரன் (33 பந்து, 5 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசி பெவிலியன் திரும்பினர். கேப்டன் பன்ட் – ஸ்டப்ஸ் இணைந்து 4வது விக்கெட்டுக்கு அதிரடியில் இறங்க டெல்லி ஸ்கோர் கணிசமாக உயர்ந்தது. பன்ட் 33 ரன் (23 பந்து, 5 பவுண்டரி) விளாசி நவீன் பந்துவீச்சில் ஹூடா வசம் பிடிபட்டார். ஸ்டப்ஸ் 22 பந்தில் அரை சதம் அடித்து அசத்தினார். டெல்லி கேப்பிடல்ஸ் 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 208 ரன் குவித்தது. ஸ்டப்ஸ் 57 ரன் (25 பந்து, 3 பவுண்டரி, 4 சிக்சர்), அக்சர் 14 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
லக்னோ பந்துவீச்சில் நவீன் 2, பிஷ்னோய், அர்ஷத் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய லக்னோ 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 189 ரன் எடுத்து, 19 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. நிக்கோலஸ் பூரான் அதிகபட்சமாக 61 ரன் (27 பந்து,6 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசினார். அர்ஷத் கான் 58 ரன், க்ருனால் பாண்டியா 18 ரன் எடுத்தனர். டெல்லி பந்துவீச்சில் இஷாந்த் சர்மா 3 விக்கெட் வீழ்த்தினார். கலீல், அக்சர் பட்டேல், முகேஷ் குமார், குல்தீப், ஸ்டப்ஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். டெல்லி 5வது இடத்துக்கு முன்னேறியது.
The post போரெல், ஸ்டப்ஸ் அதிரடி அரை சதம் லக்னோவை வீழ்த்தியது டெல்லி appeared first on Dinakaran.