×

போரெல், ஸ்டப்ஸ் அதிரடி அரை சதம்; டெல்லி 208 ரன் குவிப்பு

புதுடெல்லி: லக்னோ சூப்பர் ஜயன்ட்ஸ் அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், டெல்லி கேப்பிடல்ஸ் அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 208 ரன் குவித்தது. அருண் ஜெட்லி அரங்கில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற லக்னோ அணி கேப்டன் கே.எல்.ராகுல் முதலில் பந்துவீச முடிவு செய்தார். அபிஷேக் போரெல், ஜேக் பிரேசர்-மெக்கர்க் இணைந்து டெல்லி இன்னிங்சை தொடங்கினர். அர்ஷத் கான் வேகத்தில் அதிரடி வீரர் மெக்கர்க் டக் அவுட்டாகி வெளியேற, டெல்லி அணிக்கு அதிர்ச்சி தொடக்கமாக அமைந்தது.

அடுத்து போரெல் – ஷாய் ஹோப் ஜோடி சேர்ந்து 2வது விக்கெட்டுக்கு அதிரடியாக 92 ரன் சேர்த்தனர். ஹோப் 38 ரன் (27 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்), போரெல் 58 ரன் (33 பந்து, 5 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசி பெவிலியன் திரும்பினர். கேப்டன் ரிஷப் பன்ட் – டிரிஸ்டன் ஸ்டப்ஸ் இணைந்து 4வது விக்கெட்டுக்கு அதிரடியில் இறங்க டெல்லி ஸ்கோர் கணிசமாக உயர்ந்தது.

பன்ட் 33 ரன் (23 பந்து, 5 பவுண்டரி) விளாசி நவீன் உல் ஹக் பந்துவீச்சில் ஹூடா வசம் பிடிபட்டார். கடைசி கட்டத்தில் பவுண்டரியும் சிக்சருமாகப் பறக்கவிட்ட ஸ்டப்ஸ் 22 பந்தில் அரை சதம் அடித்து அசத்தினார். டெல்லி கேப்பிடல்ஸ் 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 208 ரன் குவித்தது. ஸ்டப்ஸ் 57 ரன் (25 பந்து, 3 பவுண்டரி, 4 சிக்சர்), அக்சர் படேல் 14 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

லக்னோ பந்துவீச்சில் நவீன் உல் ஹக் 2, ரவி பிஷ்னோய், அர்ஷத் கான் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 209 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னோ சூப்பர் ஜயன்ட்ஸ் களமிறங்கியது.

The post போரெல், ஸ்டப்ஸ் அதிரடி அரை சதம்; டெல்லி 208 ரன் குவிப்பு appeared first on Dinakaran.

Tags : Borrell, Stubbs ,Delhi ,New Delhi ,IPL League ,Lucknow Super Giants ,Delhi Capitals ,Arun Jedli Arena ,Lucknow ,Borrell ,Stubbs ,Dinakaran ,
× RELATED ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாற்று டிஜிட்டல் கேஒய்சி