×

மனைவியை தாக்கிய கணவன் கைது

நெல்லை, மே15: நெல்லை டவுன் தென்பத்து முப்பிடாதி அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் கண்ணம்மாள்(38). இவரது கணவர் ஜெகநாதன் (41). இவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் கருத்துவேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். கடந்த 13ம்தேதி கண்ணம்மாள் தனது வீட்டின் முன் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்குவந்த ஜெகநாதன், கண்ணம்மாளிடம் தகராறு செய்து தாக்கி மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் சுத்தமல்லி போலீசில் புகார் அளித்தார். எஸ்ஐ பிரேம்குமார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி ஜெகநாதனை கைது செய்தார்.

The post மனைவியை தாக்கிய கணவன் கைது appeared first on Dinakaran.

Tags : Nellai ,Kannammal ,Amman Koil Street, South Muppidathi, Nellai Town ,Jaganathan ,Dinakaran ,
× RELATED நெல்லை சந்திப்பில் வளையதரசுற்று உயரம் அதிகரிப்பு