×

6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை ; தொழிலாளி கைது

சேந்தமங்கலம், மே 15: சேந்தமங்கலம் எருமபட்டி அடுத்த புட்டிரெட்டிப்பட்டியை சேர்ந்தவர் செல்வம்(59). கூலி தொழிலாளி. இவர் அதே பகுதியில், 1ம் வகுப்பு படிக்கும் 6வயது சிறுமிக்கு, மிட்டாய் வாங்கி கொடுத்து வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். பின்னர், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.அப்போது, வலி தாங்க முடியாமல் சிறுமி அலறியுள்ளார். அவரது சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் சென்று பார்த்தபோது, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரிய வந்தது. இதையடுத்து, சிறுமியின் பெற்றோர், எருமப்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் இது குறித்து புகார் கொடுத்தனர். அதன் பேரில், செல்வத்தை போக்சோ சட்டத்தின் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை ; தொழிலாளி கைது appeared first on Dinakaran.

Tags : Senthamangalam ,Selvam ,Putirettipatti ,Senthamangalam Erumapatti ,Dinakaran ,
× RELATED 428 பயனாளிகளுக்கு ரூ.3.83 கோடியில் நல உதவிகள்