×

தனியார் நிறுவன ஊழியரிடம் ஆன்லைனில் ₹11 லட்சம் மோசடி

கிருஷ்ணகிரி, மே 15: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த ஆவலப்பள்ளி அட்கோ பகுதியில் வசிப்பவர் சங்கர்(45). இவர் ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில், ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், கடந்த ஜனவரி 15ம்தேதி, சங்கரை செல்போனில் தொடர்பு கொண்ட நபர், ஆன்லைனில் பணம் முதலீடு செய்தால், மாதந்தோறும் அதிக வருவாய் ஈட்டலாம் என ஆசைவார்த்தை கூறினார். இதனை நம்பிய சங்கர், சிறிது சிறிதாக ₹2 லட்சம், ₹3 லட்சம் என ₹11 லட்சம் வரை, அவர்கள் குறிப்பிட்ட வங்கி கணக்கிற்கு அனுப்பி வைத்தார். ஆனால், அவர் கூறியபடி மாதந்தோறும் பணம் வரவில்லை. இதையடுத்து, பல முறை ஆன்லைனில் குறிப்பிட்ட எண்ணை தொடர்பு கொண்ட போதும், எவ்வித பதிலும் இல்லை. ஒரு கட்டத்தில் அந்த செல்போன் எண் பயன்பாட்டில் இல்லை என வந்தது. தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த சங்கர், இதுகுறித்து நேற்று முன்தினம், கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். இதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, ₹11 லட்சம் ஆன்லைன் மோசடியில் ஈடுபட்ட நபர் குறித்து விசாரித்து வருகின்றனர்.

The post தனியார் நிறுவன ஊழியரிடம் ஆன்லைனில் ₹11 லட்சம் மோசடி appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,Shankar ,Avalapalli Adco ,Hosur, Krishnagiri district ,Hosur ,
× RELATED முன்னாள் ராணுவ வீரர் உயிரிழப்பிற்கு...