×

நீடிக்கும் இஸ்ரேல் – காசா போர்; ஐநாவில் பணி புரிந்த இந்திய ராணுவ வீரர் உயிரிழப்பு

ஐநா: இஸ்ரேல் – ஹமாஸ் போர் கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி தொடங்கியது. 7 மாதங்களை கடந்து நீடிக்கும் போரில் இதுவரை கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி தொடங்கிய இஸ்ரேல் – ஹமாஸ் போர் 7 மாதங்களை கடந்தும் முடிவுக்கு வரவில்லை. இதனிடையே கடந்த 2022ம் ஆண்டு இந்திய ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற கர்னல் வைபவ் அனில் காலே(46) இரண்டு மாதங்களுக்கு முன் ஐக்கிய நாடுகள் சபை பாதுகாப்பு துறையில் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளராக பணியில் சேர்ந்தார்.

இவர் நேற்று காலை ரஃபா எல்லையான யூனிஸ் கானில உள்ள மருத்துவமனைக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது வாகனம் மீது நடத்தப்பட்ட தாகுதலில் வைபல் அனில் காலே உயிரிழந்தார். மேலும் அவருடன் பயணித்த ஐநா ஊழியர் ஒருவர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

ஐநா பொதுசெயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் வௌியிட்டுள்ள அறிவிப்பில் “ஐநா ஊழியர்கள் மீதான இஸ்ரேல் தாக்குதல் மிகவும் கண்டிக்கத்தக்கது. மனிதாபிமான அடிப்படையில் போரை உடனே நிறுத்தவும், பணய கைதிகளை விடுவிக்கவும் நான் மீண்டும் வலியுறுத்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

The post நீடிக்கும் இஸ்ரேல் – காசா போர்; ஐநாவில் பணி புரிந்த இந்திய ராணுவ வீரர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Israel – Gaza war ,UN ,Israel ,Hamas ,Israel-Hamas ,Israel-Gaza ,
× RELATED பப்புவா நியூகினியாவில் ஏற்பட்ட...