×
Saravana Stores

மகப்பேறு நிதியுதவியை உடனடியாக வழங்க ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட டிவிட்டர் பதிவு: தமிழ்நாட்டில் கருவுற்ற பெண்கள் மற்றும் இளம் தாய்மார்களுக்கான மகப்பேறு நிதியுதவி திட்டத்தின் கீழ் 2 லட்சத்திற்கும் கூடுதலான பெண்களுக்கு வழங்கப்பட வேண்டிய ரூ.14,000 நிதி மற்றும் ரூ.4000 மதிப்புள்ள ஊட்டச்சத்துப் பெட்டகம் பல மாதங்களாக வழங்கப்படவில்லை என்று வெளியாகியுள்ள செய்தி மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. மத்திய அரசின் நிதியுதவியுடன் தான் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்பதால், கருவுற்ற பெண்களின் விவரம், அவர்களுக்கு செய்யப்படும் மருத்துவ ஆய்வுகள், அவர்களுக்கும், குழந்தைகளுக்கும் போடப்படும் தடுப்பூசிகள் ஆகியவை குறித்த விவரங்கள் ஆரம்ப சுகாதார நிலையங்கள் வாயிலாக மத்திய அரசின் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். ஆனால், அவ்வாறு பதிவு செய்வதில் நிகழ்ந்த குளறுபடிகளால்தான் மகப்பேறு நிதி கிடைப்பதில்லை என்று கூறப்படுகிறது. இது உடனடியாக களையப்பட வேண்டும்.

The post மகப்பேறு நிதியுதவியை உடனடியாக வழங்க ராமதாஸ் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : RAMADAS ,Chennai ,Bamaka ,Twitter ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED இனியாவது மதுக்கடைகள் மூடப்படுமா?: பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி