×
Saravana Stores

கோடைகாலம் முடிவதற்குள் ஏரி, குளம், கால்வாயை தூர்வார ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

சென்னை: கோடைகாலம் முடிவதற்குள், ஏரி குளங்களையும், வாய்க்கால்களையும் தூர் வார வேண்டும் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: கடுமையான கோடை வெயிலுக்கு பிறகு இடையில் நான்கு, ஐந்து நாட்களாக பல மாவட்டங்களில் பெய்த மழையின் காரணமாக தண்ணீர் சாலைகளில் தேங்கி குளம் போல் காட்சி அளிக்கின்றன. எனவே விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் கடைமடைகளுக்கு எளிதாக செல்லும் வகையில் வாய்க்கால்களை தூர்வார வேண்டும். அதோடு கோடை காலங்களில் ஏரி, குளங்களையும் தூர்வாரி தண்ணீரை சேமிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இயற்கை அளிக்கும் மழை தண்ணீரை சேமிக்கும் திட்டம் காமராஜர் ஆட்சிக்குப் பிறகு எந்த ஆட்சியாளரும் சரியாக செய்யவில்லை என்பது வருத்தத்திற்குரியது. இனிமேலும் காலதாமதம் செய்யாமல் கோடைகாலம் முடிவதற்குள் மழைநீர் வடிகால் பணியையும், போக்குவரத்து சாலைகளையும் உரியமுறையில் செப்பனிட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

The post கோடைகாலம் முடிவதற்குள் ஏரி, குளம், கால்வாயை தூர்வார ஜி.கே.வாசன் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : GK Vasan ,CHENNAI ,Tamaka ,president ,
× RELATED மழை பாதிப்புகளில் இருந்து மக்களை...