தேவையானவை
காளான் – 100 கிராம்
வெள்ளை மிளகுத் தூள் – 2 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
சர்க்கரை – 2 ஸ்பூன்
வெண்ணெய் – 2 ஸ்பூன்
தண்ணீர் – 1/2 லிட்டர்
ஆப்பிள் தக்காளி – 2 (வேக வைத்து அரைத்து வடிகட்டியது)
கார்ன் பிளவர் – 25 கிராம்
பால் – 50 மில்லி
செய்முறை :
முதலில் தண்ணீரில் காளானை வேக வைக்க வேண்டும். வெந்த பின் தக்காளி பேஸ்ட்டை ஊற்ற வேண்டும். கொதித்த பின் வெள்ளை மிளகுத்தூள், உப்பு, சர்க்கரை, வெண்ணெய், கான் பிளவர் மாவு போட்டு கொதிக்க வைக்கவும்.
இறுதியாக பால் ஊற்றி இறக்க வேண்டும்
The post சைனீஸ் காளான் சூப் appeared first on Dinakaran.