×

பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் குளிக்க 2 வது நாளாக தடை..!!

பெரியகுளம்: வெள்ளப்பெருக்கு காரணமாக பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் குளிக்க 2 வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டம், பெரியகுளத்தில் இருந்து 9 கி.மீ தொலைவில் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் கும்பக்கரை அருவி உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளான மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதி, கொடைக்கானல் பகுதியில் வட்டக்கானல், வெள்ளகெவி, பாம்பார்புரம் பகுதியில் மழை பெய்தால் அருவியில் நீர்வரத்து ஏற்படும்.

விடுமுறை மற்றும் கோடைகாலங்களில் தேனி மாவட்டம் மட்டுமல்லாமல், வெளி மாவட்ட சுற்றுலாப் பயணிகள் அருவியில் குவிந்து குளித்து மகிழ்வர். இந்தநிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை காரணமாக அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதியில் கும்பக்கரை அருவியில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் நேற்றைய தினம் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. தொடர்ந்து சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி கும்பக்கரை அருவியில் குளிக்க 2 வது நாளாக வனத்துறை தடை விதித்துள்ளது.

 

The post பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் குளிக்க 2 வது நாளாக தடை..!! appeared first on Dinakaran.

Tags : Kumbakarai ,Periyakulam ,Kumbakarai Falls ,Western Ghats ,Periyakulam, Theni District ,
× RELATED பெரியகுளம் கவுமாரியம்மன் கோயில் ஆனி...