×

சென்னையில் பேருந்து, புறநகர் ரயில், மெட்ரோ ரயில் என அனைத்திலும் பயணம் செய்ய ஒரே டிக்கெட் திட்டம்: ஜூன் 2வது வாரத்தில் அமல்

சென்னை: சென்னையில் பேருந்து, புறநகர் ரயில், மெட்ரோ ரயில் என அனைத்திலும் பயணம் செய்ய ஒரே டிக்கெட் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள திட்டம் ஜூன் 2வது வாரத்தில் அமலுக்கு வருவதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். நீண்ட நாட்களாக பொது போக்குவரத்துக்கு ஒரே டிக்கெட் முறையை கொண்டு வர வேண்டும் என தொடர்ச்சியாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் இதற்கான பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும் ஜூன் 2வது வாரத்தில் இந்த திட்டம் நடைமுறை படுத்தப்படுவதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் மூலமாக பொது போக்குவரத்து முறைகளில் பயணம் செய்ய ஒரே டிக்கெட் முறையை அறிமுகம் செய்வதற்கு இத்திட்டம் இறுதி வடிவத்தை பெற்றுள்ளது. சென்னையில் ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல பேருந்து, மெட்ரோ, மின்சார ரயில் உள்ளிட்ட 3 போக்குவரத்து வசதிகள் இருக்கக்கூடிய நிலையில் இந்த மூன்றிற்கும் மக்கள் தனி தனியாக டிக்கெட் எடுத்து வருகின்றனர். இத்தகைய பயண சீட்டிற்கு மாற்றாக இவை அனைத்தும் ஒரே பயண சீட்டாக கொண்டுவர கூடிய வகையில் இந்த நடைமுறை மேற்கொள்ள பட உள்ளது.

ஒரே டிக்கெட் பயன்படுத்தி இந்த மூன்றிலும் பயணிக்க வசதியாக கார்டு போன்ற பாஸ் அறிமுகப்படுத்த பட உள்ளது. இத்தகைய கார்டை பொதுமக்கள் ரிச்சார்ஜ் செய்து பயன்படுத்தலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் இறுதி கட்டத்தை ஒருங்கிணைந்த போக்குவரத்துக்கு கழகம் டெண்டர் கோரி இருக்கக்கூடிய நிலையில் அடுத்தமாதம் இத்திட்டம் செயலுக்கு வர உள்ளது. இதன் மூலம் கியூ ஆர் கோர்டு பயன்படுத்தி அனைத்துத் பொது போக்குவரத்திலும் ஒரே டிக்கெட்டுடன் பயணம் செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. ரயிலில் யுடிஎஸ் செயலி முறையிலும் நேரடியாக டிக்கெட்டுகளை பெற கூடிய வசதிகள், மெட்ரோ ரயிலில் பயணம் செய்ய கூடிய பயணிகளுக்கு பயண அட்டை, செயலி அல்லது நேரடியாக டிக்கெட்டுகளை பெற கூடிய வசதி என மூன்று வகையான திட்டங்கள் உள்ளது. இந்த நிலையில் பேருந்து, புறநகர் ரயில், மெட்ரோ ரயில் என அனைத்திலும் பயணம் செய்ய ஒரே டிக்கெட் முறை அறிமுகப்படுத்த படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

The post சென்னையில் பேருந்து, புறநகர் ரயில், மெட்ரோ ரயில் என அனைத்திலும் பயணம் செய்ய ஒரே டிக்கெட் திட்டம்: ஜூன் 2வது வாரத்தில் அமல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Suburban Rail ,Metro Rail ,Amal ,
× RELATED வழித்தட தூண்களில் விளம்பர பலகை வைத்து...