×

மீண்டும் அதிரடியாக குறைந்தது தங்கம் விலை: சவரன் எவ்வளவு தெரியுமா?

சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்துள்ளது. தங்கத்தின் விலை கடந்த மார்ச் மாதத்தில் இருந்து ஜெட் வேகத்தில் அதிகரித்து வருகிறது. இப்படியே உயர்ந்து மார்ச் 28ம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.50 ஆயிரத்தை தொட்டது. ஏப்ரல் 19ம் தேதி சவரன் ரூ55 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சத்தை தொட்டது. இந்த விலை உயர்வு நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சியடைய செய்தது. சவரன் 55 ஆயிரத்தை தாண்டிய பிறகு தங்கம் விலையில் மாற்றம் காணப்பட்டது. அதாவது, தங்கம் விலை குறைவதும், அதிகரிப்பதுமாக இருந்து வந்தது.

இந்த நிலையில் கடந்த 10ம் தேதி தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ1240 வரை உயர்ந்து, ஒரு சவரன் ரூ54,160க்கு விற்பனை செய்யப்பட்டது. அன்றைய தினம் அட்சயதிருதியை ஆகும். அட்சயதிருதியை அன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து நகை வாங்குவோரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தொடர்ந்து 11ம் தேதி தங்கம் விலை கிராமுக்கு ரூ20 குறைந்து ஒரு கிராம் ரூ6,750க்கும், சவரனுக்கு ரூ160 குறைந்து ஒரு சவரன் ரூ54,000க்கும் விற்கப்பட்டது. நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறை ஆகும். அதனால் தங்கம் விலையில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை.

ஒரு நாள் விடுமுறைக்கு பிறகு நேற்று தங்கம் விலை மேலும் சற்று குறைந்திருந்தது. அதாவது, கிராமுக்கு ரூ25 குறைந்து ஒரு கிராம் ரூ6,725க்கும், சவரனுக்கு ரூ200 குறைந்து ஒரு சவரன் ரூ53,800க்கும் விற்கப்பட்டது. இந்நிலையில் இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது. அதாவது 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.35 குறைந்து ஒரு கிராம் ரூ.6,690க்கும், சவரனுக்கு ரூ.280 குறைந்து ஒரு சவரன் ரூ.53,520க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை மட்டும் கிராமுக்கு 70 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் ரூ.90.70க்கும், ஒரு கிலோ ரூ,90,700க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை குறைவு நகை வாங்குவோருக்கு சற்று மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

The post மீண்டும் அதிரடியாக குறைந்தது தங்கம் விலை: சவரன் எவ்வளவு தெரியுமா? appeared first on Dinakaran.

Tags : Savaran ,Chennai ,Sawaran ,
× RELATED வீட்டின் பூட்டை உடைத்து 10 சவரன் நகை கொள்ளை