×

சாத்தான்குளம் அருகே மது விற்றவர் கைது

சாத்தான்குளம், மே 14: சாத்தான்குளம் அருகே மது விற்றவரை போலீசார் கைது செய்தனர். சாத்தான்குளம் எஸ்ஐ சுரேஷ்குமார் தலைமையிலான போலீசார் முருகேசன், சுந்தர் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அமுதுண்ணாக்குடி பகுதியில் சென்றபோது போலீசாரை கண்டதும் பதுங்கிய வாலிபரை பிடித்து விசாரித்தனர். அவர், வடக்கு பன்னம்பாறை மேலத்தெருவை சேர்ந்த சந்தனகுமார் மகன் மணிகண்டன் (35) என்பதும், அப்பகுதியில் மதுவை பதுக்கி வைத்து விற்றதும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து 3 மதுபாட்டிலை பறிமுதல் செய்தனர்.

The post சாத்தான்குளம் அருகே மது விற்றவர் கைது appeared first on Dinakaran.

Tags : Satankulam ,Murukesan ,Sundar ,SI ,Suresh Kumar ,Amudunnakudi ,Dinakaran ,
× RELATED சாத்தான்குளம் கொலை வழக்கை மூன்று...