×

சாத்தான்குளம் கொலை வழக்கை மூன்று மாதத்தில் விசாரணை செய்து முடிக்க உத்தரவு

மதுரை: சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் கொலை வழக்கை மூன்று மாதத்தில் விசாரணை செய்து முடிக்க, விசாரணை நீதிமன்றத்திற்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு அளித்துளளது. சிபிஐ கண்காணிப்பாளரிடம் மட்டும் சாட்சி விசாரணை மீதமுள்ளது. பிற சாட்சிகள் விசாரணை முடிந்து விட்டது என சிபிஐ வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளார். கணவர் பென்னிக்ஸ் கொலை வழக்கை விரைந்து முடிக்கக்கோரி அவரது மனைவி மனு தாக்கல் செய்திருந்தார்.

The post சாத்தான்குளம் கொலை வழக்கை மூன்று மாதத்தில் விசாரணை செய்து முடிக்க உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Madurai ,Madurai High Court ,Sathankulam ,Jayaraj Bennix ,CBI ,Dinakaran ,
× RELATED முதுநிலை மருத்துவப் படிப்பை முடித்த...