×

நாகப்பட்டினம் சாமந்தான்பேட்டையில் கொளுத்தும் வெயிலில் இருந்து தப்பிக்க கடலில் குளித்து மகிழ்ந்த இளைஞர்கள்

நாகப்பட்டினம், மே 14: கோடை வெயிலின் கொடுமையில் இருந்து பாதுகாத்து கொள்ள நாகப்பட்டினம் அருகே சாமந்தான்பேட்டை கடலில் இளைஞர்கள் ஆர்வமுடன் விளையாடினர். நாகப்பட்டினம் மாவட்டத்தில் கடந்த மாதம் முதல் வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது. காலை தொடங்கி மாலை வரை வெயில் கடுமையாக இருப்பதால் பொதுமக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியே வர தயக்கம் காட்டுகின்றனர்.

பணி நிமித்தமாக வெளியில் செல்வோர் எந்த நேரமும் தங்களது தலையில் தொப்பி அணிந்தும், குடைகளை பிடித்து கொண்டும் பயணம் செய்கின்றனர். இந்நிலையில் நாகப்பட்டினம் அருகே சாமந்தான்பேட்டை கடலில் குதித்து இளைஞர்கள் ஆர்வமுடன் விளையாடுகின்றனர். வெயிலின் கொடுமையில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ள இளைஞர்கள் ஆர்வமுடன் கடலில் இறங்கி விளையாடுவது ஆனந்தமாக இருப்பதாக தெரிவிக்கின்றனர். காலை நேரத்தில் கடலில் வீசும் காற்று குளிர்ந்த நிலையில் இருப்பதால் இளைஞர்கள் கடலில் இறங்கி மகிழ்ச்சியுடன் விளையாடுவதாக தெரிவித்தனர்.

The post நாகப்பட்டினம் சாமந்தான்பேட்டையில் கொளுத்தும் வெயிலில் இருந்து தப்பிக்க கடலில் குளித்து மகிழ்ந்த இளைஞர்கள் appeared first on Dinakaran.

Tags : Samanthanpettai ,Nagapattinam ,Samanthanpet ,Nagapattinam district ,Dinakaran ,
× RELATED நாகப்பட்டினத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்