×

கீழ்வேளூர் சாட்டியக்குடி பகுதியில் புதிதாக அமைத்த தார் சாலையில் திடீர் விரிசல்

கீழ்வேளூர், மே 14: நாகை மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியம் சாட்டியகுடி பகுதியில் ஜல்ஜீவன் திட்டத்தினால் தோண்டப்பட்ட பள்ளங்கள் மூடப்பட்டு, அதன் மேற்பரப்பில் அமைக்கப்பட்ட தார் சாலை பல்வேறு இடங்களில் திடீரென விரிசல் ஏற்பட்டது. நாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் குழாய்கள் பதிக்கும் பணிக்காக சாலையின் ஓரப்பகுதியில் தோண்டப்பட்டு நடைபெற்று வருகிறது.

குறிப்பாக கீழ்வேளூர்-கச்சனம் பிரதான சாலையின் பல்வேறு இடங்களில் இந்தப் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் மண் கொண்டும் மூடப்பட்டு சாலை அமைக்கப்படாமல் இருந்து வந்தது. இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஜல்ஜீவன் திட்டப் பணிகள் பெருமளவில் முடிந்த பின்னர் சாலையோரம் மீண்டும் தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதன்படி சாட்டியக்குடி பகுதியில் அமைக்கப்பட்ட சாலையானது கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் உள்வாங்கி பள்ளம் ஏற்பட்டு சாலை சேதம் ஏற்பட்டுள்ளது பள்ளம் மழை பெய்ய பெய்ய அதிகம் ஆகி கொண்டே வருகிறது உடன் நெடுஞ்சாலை துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்களும் வான ஓட்டிகளும் எதிர்பார்க்கின்றனர்.

The post கீழ்வேளூர் சாட்டியக்குடி பகுதியில் புதிதாக அமைத்த தார் சாலையில் திடீர் விரிசல் appeared first on Dinakaran.

Tags : Satiyakudi ,Kilvellur ,Kilivellur ,Satyagudi ,Nagai District ,Kililvelur Union ,Jaljeevan ,Satyakudy ,Dinakaran ,
× RELATED பாழடைந்த கட்டிடங்களுக்கு இடையே இயங்கும் கீழ்வேளூர் காவல் நிலையம்