- போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புண
- அரியலூர்
- அரியலூர் ரயில் நிலையம் ரிசர்வ் லைன் போலீஸ்
- போதைப்பொருள் ஒழிப்பு விழிப்ப
- விழிப்புணர்வு பேரணி
- அரியலூர் ரிசர்வ் பாதை காவல் நிலையம்
- உதவி ஆய்வாளர்
- விநாயகமூர்த்தி
- போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
- தின மலர்
அரியலூர் மே 14:அரியலூர் ரயில் நிலைய இருப்புப் பாதை காவல் நிலையம் சார்பில், போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு இயக்கம் மற்றும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. அரியலூர் இருப்பு பாதை காவல் நிலைய உதவி ஆய்வாளர் விநாயகமூர்த்தி தலைமையில், ரயில் பயணிகளிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். முன்னதாக ரயில் நிலையத்தில் கூடியிருந்த பொது மக்களிடம், போதைப்பொருள் பழக்கம் உடல் நலத்திற்கும் சமூக நலத்திற்கும் பெரும் கேடு விளைவிக்கும். எனவே மது, புகையிலை, பான் மசாலா உள்ளிட்ட பல்வேறு போதைப் பொருள் பழக்கத்தை கைவிட வேண்டும். மேலும் ரயில் பயணத்தின் போது செல்போன் பயன்படுத்திக் கொண்டு தண்டவாளத்தை கடப்பதை தவிர்க்க வேண்டும்.
தண்டவாள பாதையில் குழந்தைகள் விளையாடுவது அனுமதிக்க கூடாது. ஓடும் ரயிலில் ஏறவோ, இறங்கவோ வேண்டாம். படியில் பயணம் நொடியில் மரணம். ரயில் பயணத்தின் போது அந்நிய நபர்கள் கொடுக்கும் உணவு பொருட்களை அருந்தக்கூடாது. நகைகள் மற்றும் உடமைகளை பாதுகாப்பாக எடுத்துச் செல்ல வேண்டும் என்பது குறித்தும் ரயில்வே போலீசார் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதனையடுத்து காரைக்குடியில் இருந்து சென்னை நோக்கி வந்த பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயிலில், போதை பழக்கத்தால் உண்டாகும் பாதிப்புகள் மற்றும் ரயில் பயணத்தில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை அரியலூர் இருப்பு பாதை காவலர்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
பெரம்பலூர்,மே14: தற்போது உள்ள சூழலில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் பொது மக்களுக்கு சீரான குடிநீர் வழங்க வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேப்பந்தட்டைஆய்வு கூட்டத்தில் மாவட்டக் கலெக்டர் கற்பகம் உத்தரவிட்டார்.
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சிக ளில் நீர்நிலைகளை மேம்படுத்துதல், ஆக்கிரமிப்புக ளை அகற்றுதல் மற்றும் மக்களுக்கு சீரான குடிநீர் வழங்க எடுக்கப்பட வேண் டிய நடவடிக்கைகள் குறித்து தாசில்தார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாகஅலுவலர் கள், ஓவர்சியர்களுடனான ஆய்வுக்கூட்டம் பெரம்ப லூர் மாவட்டக் கலெக்டர் கற்பகம் தலைமையில் வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று (13ம் தேதி) நடைபெற்றது.
கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் தெரிவித் ததாவது:
தற்போது உள்ள சூழலில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் பொது மக்களுக்கு சீரான குடிநீர் வழங்க வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் ஆக்கிரமிப்பில் உள்ள நிலங்கள் உடனடி யாக மீட்டெடுக்கப்பட வேண்டும். குறிப்பாக நீர் நிலைகளை ஆக்கிரமித்துள்ளோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து நிலங் களை கையகப்படுத்த வேண்டும்.ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள நீர் நிலைகளை புனரமைக்க வேண்டும்.
வேப்பந்தட்டை ஒன் றியத்திற்கு புதிய குளங் கள் அமைக்க ஏற்கனவே பணி ஆணை வழங்கப் பட் டுள்ளது, அதனடிப்படை யில், பெரியம்மாபாளை யம், உடும்பியம், வாலி கண்டபுரம், பிரம்மதேசம், மேட்டுப்பாளையம், பசும் பலூர், அன்னமங்கலம், கை.களத்தூர், மலையா ளப்பட்டி, பிம்பலூர் மற்றும் காரியனூர் ஆகிய 11 கிரா மங்களில் சுமார் ரூ.2.25 கோடி மதிப்பில் புதிய குளங்கள் அமைக்க ஆணை வழங்கப்பட்டுள் ளது.
இந்தப் பணிகளை மழைக்காலத்திற்குள் விரைந்து முடிக்க வேண் டும்.புதிய குளங்களை அமைப் பதோடு இருந்துவிடாமல், தற்போது உள்ள குளங்க ளையும் சீரமைக்க வேண்டும். குளங்கள், ஏரிகளுக்கு வரும் வரத்துவாய்க்கால்கள், பாசன வாய்க்கால்க ளை தூர்வார வேண்டும். ஒரு வார காலத்திற்குள் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள், அரசு புறம் போக்கு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் மீட்கப்பட்டு அதற்கான அறிக்கையினை சம்மந்தப்பட்ட கிராமங்களின் கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள் வழங்க வேண்டும்.
அதேபோல, கிராமப்பகுதிகளில் குடிநீர் சீராக வழங்கப்படுகிறதா, குடிநீர் குழாய்கள் முறை யாக அமைக்கப்பட்டுள் ளதா என்றும், பழுதடைந்த நிலையில் குடிநீர் குழாய் கள் இருந்தால் அதனை உடனடியாக சீரமைத்து பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கும் பணிகளை அந்தந்த பகுதிகளின் ஓவர்சியர்கள், உதவிப்பொறியாளர், துணை வட்டார வளர் ச்சி அலுவலர்கள் கண்கா ணிக்க வேண்டும். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இந் தப்பணிகளை முறையாக மேற்கொண்டு உரிய அறி க்கை சமர்ப்பிக்க வேண்டும்.
கிராமப்பகுதிகளில் குடிநீர் வரவில்லை என குற்றச் சாட்டுகள் எழுந்தால் சம்மந் தப்பட்ட பகுதிகளின் அலுவ லர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்பு களை அகற்றும் பணியில் வருவாய்த்துறை, வளர்ச் சித்துறை, பொதுப்பணித் துறையினர் ஒருங்கிணை ந்து செயல்பட்டு கண்கா ணிப்பு பணிகளை மேற்கொண்டு ஆக்கிரமிப்புகளை அகற்றி ஒரு வார காலத்திற்குள் அதற்கான அறிக்கையினை சமர்ப்பி க்க வேண்டும் எனத் தெரி வித்தார். கூட்டத்தில் ஊராட்சிக ளுக்கான உதவி இயக்குநர் வீரமலை, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செல்வமணி, சேகர்,வேப்பந்தட்டைதாசில் தார் (பொ) மாலதி, வேப்ப ந்தட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளின் கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள், ஓவர்சீயர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பொது மக்களுக்கு
நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்பு களை அகற்றும் பணியில் வருவாய்த்துறை, வளர்ச் சித்துறை, பொதுப்பணித் துறையினர் ஒருங்கிணைந்து செயல்பட்டு கண்காணிப்பு பணிகளை மேற் கொண்டு ஆக்கிரமிப்பு களை அகற்றி ஒரு வார காலத்திற்குள் அதற்கான அறிக்கையினை சமர்ப்பிக்க வேண்டும்.
The post அரியலூரில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.