விராலிமலை, மே 14: விராலிமலை திங்கள்கிழமை வாரச் சந்தையில் பலாப்பழம் விற்பனை ஜோராக நடநதது, வரத்து அதிகரிப்பால் விலை வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து சந்தைக்கு காய்கறி வாங்குவதற்கு வந்த பலர் பழாபழத்தையும் மகிழ்ச்சியுடன் வாங்கி சென்றனர்.
தமிழகத்தில் பண்ருட்டி,சிறுமலை, புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் விளைவிக்கப்படும் பலாப்பழத்திற்கு தனி மகத்துவம் உண்டு. முக்கனிகளில் ஒன்றாக கருதப்படும் பலாப்பழம் இனிப்பு சுவை மட்டுமல்லாமல் அதனுடன் ஒரு புளிப்பு சுவையும் கலந்து இருக்கும் இதனால், இதில் அதிக சுவை இருக்கும் அதை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சுவைப்பார்கள்.
மேலும், பழாபலம் சாப்பிட்ட பின்பு அதன் உள்ளிருக்கும் பலாக்கொட்டையில் குழம்பு வைத்து உண்பது கூடுதல் மகிழ்ச்சியுடன் கலந்த ருசி. இந்த நிலையில் அப்பகுதிகளில் தற்போது பழாபழம் சீசன் தொடங்கியுள்ளது. இதனால் விளைச்சல் அதிகரித்துள்ளது. மேலும், அசைவத்துக்கு இணையான உணவாக கருத்தப்படும் பலாக்காய் குறைந்த விலைக்கு கிடைப்பதால் கூடுதல் மகிழ்ச்சியடைந்தனர் நுகர்வோர்கள். இந்த நிலையில் அப்பகுதிகளில் இருந்து விராலிமலை வாரச்சந்தைக்கு பலாப்பழம் வரத்து அதிகரித்துள்ளதால் விலை வீழ்ச்சி அடைந்து ஒரு பழம் 70,80,100 ரூபாய்க்கு விற்பனையானது.
கடந்த காலங்களில் 200 முதல் 300 ரூபாய்க்கும் கூடுதலாக விற்பனையான பழாபழத்தின் விலையால் குறைந்த அளவு வருமானம் ஈட்டி வரும் குடும்ப தலைவர்கள் பழாபழம் வாங்குவதற்கு தயக்கம் காட்டி வந்த நிலையில் தற்போது வரத்து அதிகரிப்பால் விலை வீழ்ச்சி அடைந்து 70 ரூபாய்க்கு விற்பனையானதால் குடும்ப தலைவர்கள், சந்தைக்கு வந்த பெண்கள் மகிழ்ச்சியுடன் வாங்கி சென்றனர்.
The post விராலிமலை சந்தையில் பலாப்பழம் விலை வீழ்ச்சி appeared first on Dinakaran.