×

மாநகராட்சி நிர்வாகம் முடிவு வீடு, டூவீலரை சேதப்படுத்தி பெண்ணிடம் ரகளை செய்தவர் மீது குண்டாஸ் மாநகர போலீஸ் கமிஷனர் அதிரடி

திருச்சி, மே.14: திருச்சியில் பெண்ணை ஆபாசமாக பேசி ரகளையில் ஈடுபட்டவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார். திருச்சி புத்துார் கீழ வண்ணாரப்பேட்டைய சேர்ந்தவர் ரவுடி வெங்கி என்ற வெங்கடேசன். இவர் கடந்த மே.2ம் தேதி னிவாச நகரை சேர்ந்த பெண் ஒருவரின் வீட்டுக்கு சென்று ஆபாசமாக திட்டி, அவரது வீடு மற்றும் டூவீலரை சேதப்படுத்திள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகராரின் பேரில் அரசு மருத்துவமனை போலீசார் வழக்கு பதிந்து வெங்கியை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தொடர்ந்து வெங்கி குறித்து போலீசார் நடத்திய மேல் விசாரணையில், ரவுடி வெங்கி (எ) வெங்கடேசன் மீது 5 வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது. ரவுடி வெங்கியின் தொடர் குற்ற நடவடிக்கைகளை தடுக்கும் பொருட்டு அரசு மருத்துவமனை இன்ஸ்பெக்டர் மாநகர போலீஸ் கமிஷனருக்கு அறிக்கை தாக்கல் செய்தார். அறிக்கையை ஆய்வு செய்த மாநகர போலீஸ் கமிஷனர் காமினி ரவுடி வெங்கி மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து ரவுடி வெங்கி மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் அதற்கான ஆணையை, திருச்சி மத்திய சிறையிலுள்ள வெங்கியிடம் சார்வு செய்தனர்.

The post மாநகராட்சி நிர்வாகம் முடிவு வீடு, டூவீலரை சேதப்படுத்தி பெண்ணிடம் ரகளை செய்தவர் மீது குண்டாஸ் மாநகர போலீஸ் கமிஷனர் அதிரடி appeared first on Dinakaran.

Tags : Kundas Municipal Police ,Commissioner ,Municipal Corporation ,Trichy ,Venkatesan ,Rowdy Vengi ,Lower Vannarappat, ,Puthar ,Nivasa Nagar ,Dinakaran ,
× RELATED தஞ்சை மாநகராட்சி ஆணையர் குறித்து...