×

செட்டிநாடு பப்ளிக் பள்ளி மாவட்ட அளவில் சிறப்பிடம்

காரைக்குடி, மே 14: காரைக்குடி செட்டிநாடு பப்ளிக் சிபிஎஸ்இ பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் சிவகங்கை மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்றுள்ளது. காரைக்குடி செட்டிநாடு பப்ளிக் சிபிஎஸ்இ பள்ளியில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய அனைவரும் வெற்றி பெற்று 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. இப்பள்ளி மாணவி கிருத்திகா கண்ணன் 500க்கு 490 மதிப்பெண் பெற்று 98 சதவீத மதிப்பெண்களுடன் சிறப்பிடம் பெற்றுள்ளார்.

ஜானவிகா 487 மதிப்பெண் பெற்று 97.4 சதவீதம் பெற்றுள்ளார். இந்திரா பிரியதர்ஷினி 485 மதிப்பெண் பெற்று 97 சதவீதம் பெற்றுள்ளார். சமூக அறிவியலில் ஒருவர், தமிழ் ஒருவர், செயற்கை நுண்ணறிவு பாடத்தில் 4 பேர் 100 க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர்.

இந்தப் பள்ளி மாவட்ட அளவில்
10ம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்றுள்ளது. வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளிகுழும தலைவர் குமரேசன், துணைத்தலைவர் அருண், நிர்வாக இயக்குநர்கள் சாந்திகுமரேசன், பிரித்திஅருண், பள்ளி முதல்வர் உஷாகுமாரி, துணைமுதல்வர் பிரேமசித்ரா, ஆசிரியர்கள், அலுவலர்கள் பாராட்டினர்.

The post செட்டிநாடு பப்ளிக் பள்ளி மாவட்ட அளவில் சிறப்பிடம் appeared first on Dinakaran.

Tags : Chettinadu Public School District ,Karaikudi ,Karaikudi Chettinadu Public CBSE School ,Sivaganga ,Karaikudi Setinad Public CBSE School ,Chetinadu Public School District ,Dinakaran ,
× RELATED காரைக்குடி தாலுகா அலுவலகத்தில் பயனாளிகளுக்கு பட்டா வழங்கல்