திருவனந்தபுரம்: கேரள மாநிலம் பத்தனம்திட்டா பகுதியில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு கண்டு பிடிக்கப்பட்ட பகுதியில் 1 கிமீ சுற்றளவில் வளர்க்கப்பட்டு வரும் வாத்துகள் உள்பட பறவைகளை இன்று கொல்ல தீர்மானிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் திருவல்லா அருகே நிரணம் பகுதியிலுள்ள ஒரு அரசுப் பண்ணையில் வளர்க்கப்பட்டு வரும் வாத்துகளுக்கு பறவைக் காய்ச்சல் பரவியது கண்டு பிடிக்கப்பட்டது. கடந்த ஒரு சில தினங்களில் இந்தப் பண்ணையில் வளர்க்கப்பட்டு வந்த நூற்றுக்கும் மேற்பட்ட வாத்துகள் செத்தன. நேற்று பத்தனம்திட்டா மாவட்ட கலெக்டர் பிரேம் சங்கர் தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் நோய் பாதிப்பு கண்டு பிடிக்கப்பட்ட பகுதியில் 1 கிமீ சுற்றளவில் வளர்க்கப்பட்டு வரும் வாத்துகள், கோழிகள் உள்பட வளர்ப்பு பறவைகளை கொல்ல தீர்மானிக்கப்பட்டது. இன்று காலை 8 மணி முதல் பறவைகளை கொல்லும் பணி தொடங்கும்.
The post கேரளாவில் பறவைக் காய்ச்சல் வாத்துகள், கோழிகளை கொல்ல முடிவு appeared first on Dinakaran.